வெண்பூசணி லேகியம்
****************************
பாடல் – சித்த வைத்திய திரட்டு –
***********************************
கொள்ளவே கூழ்ப்பாண்டாவி லேகி யந்தான்
குணமான கூழ்ப்பாண்டச் சாறுபடி நான்கு
விள்ளவே தாழையிட விழுதின் சாறு
விருதான படியொன்று தென்னம் பூவொன்று
தள்ளவே பழச்சாறு படிதா னொன்று
தளமான வாவின்பால் படிதானிரண்டு
பள்ளவே சர்க்கரைதான் பலமோர் பத்து
பதறாமற் கரைத்த தனைப் பாகுசேரே
சேருமே சீரகமு மல்லி கோட்டம்
வளமான மிளகுமா சிக்கா யேலம்
காருமே சாதிக்காய் சாதி பத்திரி
கருவான மதுரமொடு தாளீ சந்தான்
வாருமே ஒருவகைக்குப் பலமொன் றாக
வகையாகச் சூரணித்துப் பாகிற் றூவி
நேருமே தேநெய்படி யரைதான் விட்டு
நினைவாகக் கூலுபோல் கிண்டி வாங்கே
வாங்கியே புன்னைக்கா யளவு வீதம்
வளமான விலேகியத்தைக் கொண்டாயானால்
நீக்காமே காமாலை சோகை யெல்லாம்
நீங்காத வத்திசுர மத்தி வெட்டை
தாங்கியதோர் பிரமியங்கள் வெள்ளை வீழ்தல்
தளமாகும் தேகபுஷ்டி விந்து வூரும்
பாங்கியே யுஷ்ணநோய் நீர்ச்சுருக்கு
பறக்குமே புளிபுகைநீ தள்ளிக் கொள்ளே
செய்முறை விபரம் ---
வெண்பூசணிகாய்ச் சாறு படி 4 (5.36 lit)
தாழை விழுதுச் சாறு – படி 1(1.34lit)
தென்னம்பூ சாறு -------- படி 1(1.34lit)
எலுமிச்சம்பழ சாறு – படி 1(1.34lit)
பசுவின் பால் படி –2 (2.68lit)
சர்க்கரை பலம் – 10 (350gm) ---- இவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து கரைத்து வட்கட்டி அடுப்பிலேற்றி காய்ச்சி பாகுபதம் வரும்போது கீழ்கண்ட சர்க்குகளினை சேர்த்து பொடித்து சலித்து பாகில் சேர்த்துக் கிண்டவும்
சரக்குகள் –
சீரகம் ---------------------- பலம் 1 (35gm)
கொத்தமல்லி -------- பலம் 1 (35gm)
கோஷ்டம் ------------- பலம் 1 (35gm)
மிளகு -------------------- பலம் 1 (35gm)
மாசிக்காய் ------------ பலம் 1 (35gm)
ஏலம் --------------------- பலம் 1 (35gm)
சாதிக்காய் ----------- பலம் 1 (35gm)
சாதிப்பத்திரி -------- பலம் 1 (35gm)
அதிமதுரம் ----------- பலம் 1 (35gm)
தாளிசம் --------------- பலம் 1 (35gm) இவையாவும் அளவுப்படி எடுத்து இளம்வருப்பாக வறுத்து சூரணித்து நன்றாக வடிகட்டிக் கொள்ள வேண்டும் இதை பாகில் கலந்து நெய் –1/4படி (350ml) தேன் - –1/4படி (350ml) சேர்த்துக் கிண்டவும்
உபயோகம் – காமாலை, சோகை, அஸ்தி சுரம் (எலும்பைப் பற்றிய சுரம்). அத்தி வெட்டை, பிரமியம், வெள்ளை,இந்நோய்கள் தீரும் உடல் வலுக்கும் விந்து ஊரும், சூட்டினால் உண்டாகும் நோய்கள் நீர்ச்சுருக்கு தீரும்
பத்தியம் – புளி புகை நீக்கவும்
அளவு – 5gm – 10gm வரை
*******************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.

No comments:
Post a Comment