Thursday, 16 May 2019

பல்வழி,ஈறு வீக்கம்,வாய்நாற்றம்

.                                  தந்தச்சுத்தி
                              *****************
            தந்த சுத்தி என்றால் பல் துலக்குவதுதான்.
 பல் துலக்குதல் என்பது பல்லை வெண்மையாக வைத்துக் கொள்வது மட்டுமல்ல பல் ஈறுகள் கரையாமல் பாதுகாக்கவும் பல் ஈறுகள் உறுதியாகவும் பல்லின் வேர்ப்பகுதி நன்றாக இருக்கவும் பித்தநீரை அகற்றவும் நீண்டநாட்கள் பல் விழாமல் உறுதியாக இருக்கவும் செய்யக்கூடிய செயலாகும் .

           சித்தர்கள் கூறிய மிக உயர்ந்த உன்னதமான தந்த சூரணம் .

தேவையான பொருட்கள்:
****************************
வேப்பம் பட்டை சூரணம் 100 கிராம்.
 கருவேலம் பட்டை சூரணம் 100 கிராம்
ஆலமர விழுது பட்டை சூரணம் 100 கிராம் .
நாயுருவி வேர் பட்டை சூரணம் 75 கிராம்
கடுக்காய் சூரணம் 100 கிராம்.
இந்துப்பு சூரணம் 125 கிராம் .
கிராம்பு சூரணம் 60 கிராம் .

செய்முறை: .
*************
மேற்கண்ட அனைத்தையும் ஒன்று கலந்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் .

உபயோகிக்கும் முறை:
**************************
        இந்த சூரணத்தைக் கொண்டு காலை இரவு
இரு வேளை அல்லது காலை மட்டும் வலது கை ஆட்காட்டி விரல் கொண்டு பற்களையும் ஈறுகளையும் நன்றாக தேய்த்து பின் வெந்நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும் .

தீரும் நோய்கள்:
******************
மேற்கண்டவாறு தொடர்ந்து செய்வதனால் பற்களும் ஈறுகளும் வலுவடைவதுடன் பற்களில் உள்ள கரைகள் ஈறு வீக்கம் வாய் நாற்றம் பல் அசைவு ஆகிய நோய்கள் நீங்குவதுடன் பற்கள் இறுகி வலுப்பெறும் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்து முகவசியம் அழகு உண்டாகும்.

**********************************************
M.S.சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
******************************************
******************************************

No comments:

Post a Comment

ஆண்மை குறைவு.

  ஆண்மை குறைவு என்றால் என்ன?              ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக...