சகலவிதமான மண்டையிடியையும் குணப்படுத்தக்கூடிய அற்புதமான தைல முறை. ( சுடர் தைலம்) பெரிய பெரிய மண்டையிடிகளை எல்லாம் எளிதில் குணப்படுத்தி விடும் எனவே இதற்க்கு பேரிடி தைலம் என பெயர். எருக்கலம் இலை சார் 250 மில்லி. தைவேளை சார் 250 மில்லி. நல்லெண்ணை 1 லிட்டர். நயம் சாம்பிராணி 40 கிராம். மிளகு 20 கிராம். கருஞ்சீரகம் 10 கிராம். கொடிவேலி வேர் தொலி 10 கிராம். 4 முதல் 7 வரை உள்ள சரக்குகளை நன்கு பொடித்து எண்ணையில் போடவும். 1. 2 சார்களையும் எண்ணையில் விடவும். கலக்கி நிர் வற்ற காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும்.பின் 250 கிராம். சுக்கை நன்கு பொடித்து மேற்படி எண்ணையை சிறிது விட்டு குழப்பி ஒரு துணியில் பொட்டலமாக கட்டி அந்த பொட்டலத்தை சிறு கம்பியால் அவிழ்ந்து விடாதபடி சற்று இறுக்கமாக கட்டி அதனை ஒரு கம்பியில் கட்டி தொங்கவிடவும். பின் பொட்டலத்தில் நெருப்பு பற்ற வைக்கவும் . இப்போது பொட்டலம் எரியும் .பொட்டலத்திற்க்கு நேராக ஒரு இரும்பு சட்டி கீழே வைக்கவும். இப்போது நாம் ஏற்கனவே தயாரித்து வைத்து இருக்கும் எண்ணைய கொஞ்சம் கொஞ்சமாக எரியும் பொட்டலத்தின் மீது விடவும். அது பொட்டலத்துள் இறங்கி பின் கீழே வைக்கப்பட்டுள்ள சட்டியில் விழும். இவ்வாறு எண்ணை முழுவதும் விட்டு கீழ் பாத்திரத்தில் சேகரித்து எடுக்க வேண்டும்.பின் கம்பியில் இருக்கும் பொட்டலத்தை தலைகீழாக மாற்றி கட்டி இந்த எண்ணையை விட்டு இதேபோல் மீண்டும் ஒரு முறை செய்யவும். எப்படி பட்ட தலைவலியாக இருந்தாலும் இதில் குணமாகியே தீரும்.இந்த தைலம் தயார் செய்ய உழைப்பு அதிகம் என்றாலும் பயன்பாடு அதிகம் ஒவ்வொரு மருத்துவர்களும் தயார் செய்து பயன்படுத்தவும். இரண்டு முறை சுடர் வாங்கியபின் சுமார் 500 மில்லி தைலம் கிடைக்கும். பயன். 30 மில்லி தைலம் காலையில் தலையில் தேய்த்து 6 மணி நேரம் கழித்து வென்னீரில் குளிக்க. வாத. பித்த.கப குற்றங்களால் வந்த எந்த தலைவலியும் போய்விடும். சாதாரண மண்டையிடியாக இருந்தால் ஒரே நாளில் குணமாகிவிடும்.வருடக்கணக்காக இருக்கும் மண்டையிடி வாரம் ஒரு முறை என 3 அல்லது 4 தடவை குளிக்க குணமாகிவிடும்.மிக அருமையான தைலம். தைலம் தேய்த்து குளிக்கும் அன்று பகல் உறக்கம் கூடாது.அசைவம் சாப்பிட கூடாது.உடலுறவு கூடாது. வாத பித்த கப ங்ளை கூட்டகூடிய உணவுகளை தவிர்த்து எழிதில் ஜீரனிக்ககூடிய உணவுகளை எடுத்துகொள்ளவும். சித்த மருத்துவர். M.சுகவனேஸ்வரன் . SMP
Subscribe to:
Post Comments (Atom)
ஆண்மை குறைவு.
ஆண்மை குறைவு என்றால் என்ன? ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக...
-
. சித்த மருத்துவத்தின் இரகசியம் ****************************************** ...
-
நேற்றைய பதிவில் திராட்சை மணப்பாகு தயாரித்து பதிவிட்டேன் **************************************************. நிறைய நன்பர்களும்.மருத்துவர்...
-
மன்மத தைலம் ****************** ****************** பாதாம் பருப்பு -250 கிராம் அக்ரூட் பருப்பு - 250 கிரா...
No comments:
Post a Comment