Thursday, 23 May 2019

வெண்புள்ளி,சொரியாசிஸ்,செதில் உதிரும் நோய்:

வெண்புள்ளி மற்றும் தோல் நோய்களுக்கு
                     நிரந்தர தீர்வாகும்  .                                                                         *                 சேவகனார் தைலம்:
        **************************************
        **************************************   
தோல் நோயின் தன்மை தோல் நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான மருந்துகள் போன்றவை சித்த மருத்துவ நூல்களில் விபரமாக தொகுக்கப்பட்டுள்ளன அதில் யூகி முனிவருக்கு  முன்பு நூல் எழுதியவர்கள் எல்லாம் பெரும்பாலும் முக்குற்ற அடிப்படையில் மட்டுமே நோய்களை விவரித்துள்ளனர் ஆனால் நோய் கணிப்பில் புதிய யுக்தி முறையை புகுத்தி நோய் கணிப்பை எழுதியவர் யூகி முனிவரே  ஆவார் .
*******************************************************
யூகிமுனிவர் தோல் நோய்களை பாகுபடுத்தும் போது தனது யூகி வைத்திய சிந்தாமணி என்ற நூலில்

குஷ்டம் தான் பதினெட்டின் சாத்தியம் கூறக் கேள்                   சாம கிருஷ்ண குஷ்டம் சாத்தியமாமென்னே

என்று கூறி 18 வகைகளில் 10 வகையான குஷ்டத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவது எளிது என்றும் எட்டுவகை குஷ்டத்தை அசாத்தியம் என்றும் கூறியுள்ளார் அதில் புண்டரீக குஷ்டம் அசாத்தியம் என்றும் அதன் தன்மையை தனது

 497வது பாடலில்

கூடுமே தாமரையின் பூவிதழ் போல்
குவிந்திடுமே கருப்போடு வெளுப்புமாகும்
தேடுமே ......புண்டரீக. புதுமை தானே

 என்று அவர் குறிப்பிடும் நோய் வெண்புள்ளி நோய் என்ற வெண்குஷ்டம் ஆகும் இந்த நோயை சேவகனார் தைலம் குணப்படுத்துகிறது .

வெண்புள்ளி நோய்.
**********************
உடம்பில் கை கால் முகம்  பிறப்பு உறுப்புகளில் ஆரம்பகாலத்தில் வெண் புள்ளிகளாக தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி உரோமம் உள்பட தோல் பகுதி முழுவதும் வெண்மை நிறத்தை அடையும் இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும் முதலில் ஆசனவாய் உள்ளங்கால் உதடு விரல்களின் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும் .

செதில் உதிரும் நோய்:.
*************************
 இது தோலின் மேல் சிவப்பு நிறத்தில் வட்டமாக தோன்றும் அதன்மேல் சிரங்கு போன்ற கொப்புளங்கள் தோன்றி பின் தலை கை கால் முகம் வயிறு பக்கங்களில் வெண்மை நிறத்துடன் செதில் செதிலாய் தோன்றி விரிவடையும்.        யூகி முனிவர்  தனது நூலில் இதன் தன்மைகளை விரிவாக எழுதியுள்ளார் விற்போடகக்  குஷ்டம் என்ற தலைப்பில்

 498 வது பாடலில் குஷ்டரோக நிதானம் பகுதியில்

 புதுமையை சரீர மெங்கும் தினவு உண்டாகும் கனத்த விருப்போடு குஷ்டம் தானே என்று கூறியுள்ளார் அவரின்
 517 வது பாடலில் இந்த நோய் சாத்தியம் என்கிறார் இந்த நோய் உடல் முழுமைக்கும் பரவி துன்பத்தை கொடுத்தாலும் சேவகனார் தைலம்  அவர்களை நோயிலிருந்து விடுபட செய்கிறது .

              சேவகனார் தைலம் செய்முறை .
      *********************************************
தேவையான பொருட்கள்:
*****************************
பிரிவு - அ

கார்த்திகை கிழங்கு 100 கிராம்
காட்டுள்ளிக் கிழங்கு 100 கிராம்
முதியோர் கூந்தல் 100 கிராம்
பிரப்பன் கிழங்கு 100கிராம்
பரங்கிப்பட்டை 100 கிராம்
முதிர்ந்த வேம்பின் பட்டை 100 கிராம்
வெள்ளாட்டு சாணி 100 கிராம்

பிரிவு-ஆ

புங்கன் எண்ணெய் 200 மில்லி
வேப்ப எண்ணெய் 200 மில்லி
இலுப்பை எண்ணெய் 200 மில்லி
 ஆமணக்கு எண்ணெய் 200 மில்லி
நல்லெண்ணெய் 200 மில்லி .

பிரிவு-இ

வெள்ளை பூண்டு சாறு  1 லிட்டர்
பெருங்காயம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
மிளகு 50 கிராம்
திப்பிலி 50 கிராம்
கற்கண்டு 500 கிராம்

செய்முறை
*************
பிரிவு - அ - வில் குறிப்பிட்ட மருந்து சரக்குகளை நன்றாக இடித்து பட்டைகளை நன்றாக சிதைத்து 100 லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு ஒரு மரத்து விறகு கொண்டு ஒரு லிட்டராக சுண்டும் வரை நன்றாக எரிக்கவும் அந்த கசாயத்தை நன்கு வடிகட்டி கொண்டு ஒரு பெரிய வாணலியில் ஊற்றி அதில் பிரிவு - இ -யில் உள்ள வெள்ளைப்பூண்டு சாறுடன் மற்ற பொருட்களை கூட்டி (சரக்குகள் அனைத்தையும் இடித்து சலித்து பின்)                          ஆ - பிரிவில் உள்ள எண்ணெய்ப் பொருட்கள் கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி எரித்து நீர் சுண்டி வரும் பக்குவத்தில் கற்கண்டை பொடி செய்து போட்டு மெழுகு பதம் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்.

மருந்தின் அளவு.
*******************
.
 பெரியவர்களுக்கு ஒரு தேக்கரண்டி (5 மில்லி) சிறியவர்களுக்கு அரை தேக்கரண்டி( மூன்று மில்லி) மருந்தை பச்சை அரிசி மாவில் கலந்து காலை மாலை இருவேளைகள் உணவிற்கு 15 நிமிடம் முன்பு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்

மருந்துண்ணும் நெறி:
************************
மருந்து உண்ணும் போது இறைச்சி உலர்ந்த மீன் மொச்சை கொள்ளு புளி புளிப்பு சுவையுள்ள பழங்கள் பூசணி கடுகு எண்ணெய் புகையிலை மற்றும் போதை பொருட்கள் தவிர்க்க வேண்டும் உடலுறவு கூடாது

குணப்படுத்த முடிவதும் முடியாததும்: செதில் உதிரும் நோய் உடல் முழுவதும் வியாபித்து கனத்து கரடு கட்டி இருப்பினும் குணமடையும் வெண்புள்ளி நோய் ஆரம்ப நிலை மற்றும் நடு கட்டத்தில் குணமாகும் ஆனால் வெண்புள்ளி நோய் உடல் முழுவதும் பரவி வெண்படை நோயாகி முழங்கால் கைகளிலும் கரடு ஏற்பட்டு  புபுண்களாகி நீர்வடியும் பட்சத்தில் முழுமையாக தீர்க்க முடியாது

நோய் குணமாவதற்கான பிறநடவடிக்கைகள்.
**************************************************
          மாதம் 2 நாள் பேதியாகும் மமருந்துகளை கொடுப்பது.
காலை மாலை என இருவேளையும் தலை முதல் கால் வரை வெந்நீரால் துடைப்பது அல்லது குளிப்பது.
            உடல் சூட்டைக் குறைப்பதற்கு குளிர்ச்சியை உண்டாக்கும் தைல வகைகளான சந்தனாதி பொன்னாங்கன்னி போன்றவற்றைப் பயன்படுத்த அறிவுருத்துவது.
            மேலும் குமரி நெய் கட்டுக்கொடிச் சாறு வெங்காயச் சாறு இவற்றுடன் தேன் கலந்து உட்கொள்ள பரிந்துரை செய்தல்.
****************************************
பூர்வீக மருத்துவ நூல் களஞ்சியம் புத்தகத்தில் இருந்து

****************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
*****************************************
*****************************************

1 comment:

  1. நல்ல பதிவு ஐயா. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete

ஆண்மை குறைவு.

  ஆண்மை குறைவு என்றால் என்ன?              ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக...