Thursday, 23 May 2019

வெண்புள்ளி,சொரியாசிஸ்,செதில் உதிரும் நோய்:

வெண்புள்ளி மற்றும் தோல் நோய்களுக்கு
                     நிரந்தர தீர்வாகும்  .                                                                         *                 சேவகனார் தைலம்:
        **************************************
        **************************************   
தோல் நோயின் தன்மை தோல் நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான மருந்துகள் போன்றவை சித்த மருத்துவ நூல்களில் விபரமாக தொகுக்கப்பட்டுள்ளன அதில் யூகி முனிவருக்கு  முன்பு நூல் எழுதியவர்கள் எல்லாம் பெரும்பாலும் முக்குற்ற அடிப்படையில் மட்டுமே நோய்களை விவரித்துள்ளனர் ஆனால் நோய் கணிப்பில் புதிய யுக்தி முறையை புகுத்தி நோய் கணிப்பை எழுதியவர் யூகி முனிவரே  ஆவார் .
*******************************************************
யூகிமுனிவர் தோல் நோய்களை பாகுபடுத்தும் போது தனது யூகி வைத்திய சிந்தாமணி என்ற நூலில்

குஷ்டம் தான் பதினெட்டின் சாத்தியம் கூறக் கேள்                   சாம கிருஷ்ண குஷ்டம் சாத்தியமாமென்னே

என்று கூறி 18 வகைகளில் 10 வகையான குஷ்டத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவது எளிது என்றும் எட்டுவகை குஷ்டத்தை அசாத்தியம் என்றும் கூறியுள்ளார் அதில் புண்டரீக குஷ்டம் அசாத்தியம் என்றும் அதன் தன்மையை தனது

 497வது பாடலில்

கூடுமே தாமரையின் பூவிதழ் போல்
குவிந்திடுமே கருப்போடு வெளுப்புமாகும்
தேடுமே ......புண்டரீக. புதுமை தானே

 என்று அவர் குறிப்பிடும் நோய் வெண்புள்ளி நோய் என்ற வெண்குஷ்டம் ஆகும் இந்த நோயை சேவகனார் தைலம் குணப்படுத்துகிறது .

வெண்புள்ளி நோய்.
**********************
உடம்பில் கை கால் முகம்  பிறப்பு உறுப்புகளில் ஆரம்பகாலத்தில் வெண் புள்ளிகளாக தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி உரோமம் உள்பட தோல் பகுதி முழுவதும் வெண்மை நிறத்தை அடையும் இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும் முதலில் ஆசனவாய் உள்ளங்கால் உதடு விரல்களின் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும் .

செதில் உதிரும் நோய்:.
*************************
 இது தோலின் மேல் சிவப்பு நிறத்தில் வட்டமாக தோன்றும் அதன்மேல் சிரங்கு போன்ற கொப்புளங்கள் தோன்றி பின் தலை கை கால் முகம் வயிறு பக்கங்களில் வெண்மை நிறத்துடன் செதில் செதிலாய் தோன்றி விரிவடையும்.        யூகி முனிவர்  தனது நூலில் இதன் தன்மைகளை விரிவாக எழுதியுள்ளார் விற்போடகக்  குஷ்டம் என்ற தலைப்பில்

 498 வது பாடலில் குஷ்டரோக நிதானம் பகுதியில்

 புதுமையை சரீர மெங்கும் தினவு உண்டாகும் கனத்த விருப்போடு குஷ்டம் தானே என்று கூறியுள்ளார் அவரின்
 517 வது பாடலில் இந்த நோய் சாத்தியம் என்கிறார் இந்த நோய் உடல் முழுமைக்கும் பரவி துன்பத்தை கொடுத்தாலும் சேவகனார் தைலம்  அவர்களை நோயிலிருந்து விடுபட செய்கிறது .

              சேவகனார் தைலம் செய்முறை .
      *********************************************
தேவையான பொருட்கள்:
*****************************
பிரிவு - அ

கார்த்திகை கிழங்கு 100 கிராம்
காட்டுள்ளிக் கிழங்கு 100 கிராம்
முதியோர் கூந்தல் 100 கிராம்
பிரப்பன் கிழங்கு 100கிராம்
பரங்கிப்பட்டை 100 கிராம்
முதிர்ந்த வேம்பின் பட்டை 100 கிராம்
வெள்ளாட்டு சாணி 100 கிராம்

பிரிவு-ஆ

புங்கன் எண்ணெய் 200 மில்லி
வேப்ப எண்ணெய் 200 மில்லி
இலுப்பை எண்ணெய் 200 மில்லி
 ஆமணக்கு எண்ணெய் 200 மில்லி
நல்லெண்ணெய் 200 மில்லி .

பிரிவு-இ

வெள்ளை பூண்டு சாறு  1 லிட்டர்
பெருங்காயம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
மிளகு 50 கிராம்
திப்பிலி 50 கிராம்
கற்கண்டு 500 கிராம்

செய்முறை
*************
பிரிவு - அ - வில் குறிப்பிட்ட மருந்து சரக்குகளை நன்றாக இடித்து பட்டைகளை நன்றாக சிதைத்து 100 லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு ஒரு மரத்து விறகு கொண்டு ஒரு லிட்டராக சுண்டும் வரை நன்றாக எரிக்கவும் அந்த கசாயத்தை நன்கு வடிகட்டி கொண்டு ஒரு பெரிய வாணலியில் ஊற்றி அதில் பிரிவு - இ -யில் உள்ள வெள்ளைப்பூண்டு சாறுடன் மற்ற பொருட்களை கூட்டி (சரக்குகள் அனைத்தையும் இடித்து சலித்து பின்)                          ஆ - பிரிவில் உள்ள எண்ணெய்ப் பொருட்கள் கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி எரித்து நீர் சுண்டி வரும் பக்குவத்தில் கற்கண்டை பொடி செய்து போட்டு மெழுகு பதம் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்.

மருந்தின் அளவு.
*******************
.
 பெரியவர்களுக்கு ஒரு தேக்கரண்டி (5 மில்லி) சிறியவர்களுக்கு அரை தேக்கரண்டி( மூன்று மில்லி) மருந்தை பச்சை அரிசி மாவில் கலந்து காலை மாலை இருவேளைகள் உணவிற்கு 15 நிமிடம் முன்பு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்

மருந்துண்ணும் நெறி:
************************
மருந்து உண்ணும் போது இறைச்சி உலர்ந்த மீன் மொச்சை கொள்ளு புளி புளிப்பு சுவையுள்ள பழங்கள் பூசணி கடுகு எண்ணெய் புகையிலை மற்றும் போதை பொருட்கள் தவிர்க்க வேண்டும் உடலுறவு கூடாது

குணப்படுத்த முடிவதும் முடியாததும்: செதில் உதிரும் நோய் உடல் முழுவதும் வியாபித்து கனத்து கரடு கட்டி இருப்பினும் குணமடையும் வெண்புள்ளி நோய் ஆரம்ப நிலை மற்றும் நடு கட்டத்தில் குணமாகும் ஆனால் வெண்புள்ளி நோய் உடல் முழுவதும் பரவி வெண்படை நோயாகி முழங்கால் கைகளிலும் கரடு ஏற்பட்டு  புபுண்களாகி நீர்வடியும் பட்சத்தில் முழுமையாக தீர்க்க முடியாது

நோய் குணமாவதற்கான பிறநடவடிக்கைகள்.
**************************************************
          மாதம் 2 நாள் பேதியாகும் மமருந்துகளை கொடுப்பது.
காலை மாலை என இருவேளையும் தலை முதல் கால் வரை வெந்நீரால் துடைப்பது அல்லது குளிப்பது.
            உடல் சூட்டைக் குறைப்பதற்கு குளிர்ச்சியை உண்டாக்கும் தைல வகைகளான சந்தனாதி பொன்னாங்கன்னி போன்றவற்றைப் பயன்படுத்த அறிவுருத்துவது.
            மேலும் குமரி நெய் கட்டுக்கொடிச் சாறு வெங்காயச் சாறு இவற்றுடன் தேன் கலந்து உட்கொள்ள பரிந்துரை செய்தல்.
****************************************
பூர்வீக மருத்துவ நூல் களஞ்சியம் புத்தகத்தில் இருந்து

****************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
*****************************************
*****************************************

Wednesday, 22 May 2019

ஆவாரம்பூ தேனீர்.

ஆவாரம்பூ தேனீர். (அனைவருக்கும் ஏற்றது)
**********************************************.
நிழலில் காய வைத்துஇடித்துத்
தூள் செய்த ஆவாரம்பூ தூள்            -   200 கிராம்
மல்லி வருத்து இடித்த தூள்               -   100 கிராம்
பருத்தி விதை வருத்து இடித்த தூள்-   100 கிராம்
காய வைத்து இடித்த ரோஜா இதழ் தூள்-75 கிராம்
காய வைத்து இடித்த ஏலக்காய் தூள்     -  50 கிராம

*******************************************************
எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்து கொண்டு
தண்ணீரில் தேவையான அளவு கலந்து காய்ச்சி
டிகாசன் எடுத்து காய்ச்சிய சூடான பாலில் சேர்த்து
பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிடவும்

********************************************************
சூடு தணியும். மூத்திரம் நன்றாக போகும். இதயத்திற்க்கு நற்பலன் ஏற்படும்.விந்து நஸ்டம் ஏற்படாது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். புத்துனர்ச்சி ஏற்படும். ருசியா இருக்கும் பித்தம் தனிந்து மலச்சிக்கல் சரியாகும்.சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் சிறப்பாக இருக்கும்.அனைவருக்கும் ஏற்றது.
*********************************************************

.

தலைவழி,கைகால் வழி நீங்க மின்சார தைலம்.

அதிசய மருந்து மின்சார தைலம்.
************************************
************************************
பொதினா உப்பு மென்தால்    ----  30 கிராம் .
ஓம உப்பு தைமால்                     ----  30 கிராம்
கட்டி கற்பூரம் என்ற பூச்சூடம்  ----  15. கிராம்
பச்சை கற்பூரம்                            ---   15. கிராம்
ஒரு கண்ணாடி பாட்டிலில் நான்கு பொருட்களையும் தனித்தனியாக தூள் செய்துஒன்றாக ககலந்து சற்று  நேரம் வெயிலில் வைக்கவும் நீராக உருகி விடும்  பின் வடிகட்டி உபயோகிக்கலாம் .

தீரும் நோய்கள் .
******************
 1.சாதாரணம் சுரம்: மூன்று முதல் ஐந்து சொட்டு காபி அல்லது பாலில் கலந்து கொடுக்கவும்
. 2. வயிற்று வலி: ஐந்து துளி வென்னீரில் கொடுக்கவும்.
3. வாந்தி தேனில் எலுமிச்சம்பழச் சாறு கலந்து மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 4. காலரா பழுப்பு சர்க்கரையில் மூன்று விட்டுக் கொடுக்கவும் 3 மணி நேரத்தில் நிற்காவிடில் நிற்கும் வரை மூன்று மணிக்கு ஒரு தடவை கொடுக்கவும்.
5. தலைவலி இஞ்சி சாற்றில் தேன் கலந்து மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 6. விக்கல் சூடான பாலில் மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 7. கக்குவான் இருமல் தேன் அல்லது நன்னாரி சர்பத்தில் இரண்டு துளி விட்டுக் கொடுக்கவும் தொண்டையில் தைலத்தை தேய்க்கவும் உள் நாக்கில் தடவவும் இவ்வாறு நான்கைந்து நாட்கள் செய்யவும்.
8. தாது விருத்திக்கு வெண்ணையில் அல்லது அல்வாவில் மூன்று துளி விட்டு காலை மாலை சாப்பிட்டு வரவும்.
 9. பித்தத்திற்கு எலுமிச்சை இலை அகத்திக்கீரை சம அளவு கசாயம் ஒரு அவுன்சு கசாயத்தில் மூன்று துளி விட்டு ஐந்து நாட்கள் சாப்பிடவும்.
10. காசத் தீர்க்கும் கோழை நாசத்திற்கும்
ஆடாதொடை கசாயத்தில் தேன் விட்டு மூன்று துளி வீதம் குணமாகும்வரை சாப்பிடவும்.
11. மந்தாரகாசம் கண்டங்கத்திரி தூதுவளை துளசி இவைகளை சேர்த்து கசாயம் செய்து நெய் தேன் விட்டு ஒரு வேலைக்கு மூன்று துளி குணமாகும்வரை சாப்பிடவும் (தேனும் நெய்யும் சம அளவாக சேர்க்கக்கூடாது சிறிது கூடுதல் குறைச்சலாக சேர்க்க வேண்டும் ஒரு மனிதன் தேனையும் நெய்யையும் சம அளவு சேர்த்து குடித்தால் அது மரணத்துக்கு ஏதுவாகும்).
12. சகல வலி பஞ்சில் நனைத்து வலியுள்ள பாகத்தில் தொட்டு வைக்கவும் வீக்கத்தில் தைலத்தைத் தேய்த்து ஒத்தடம் கொடுக்கவும்.
13. இடுப்பில் பிடிப்பு கை கால் குடைச்சல் சுக்கு கசாயத்தில் மூன்று துளி இதுபோல் மூன்று நாள் வலியுள்ள பாகத்தில் தைலம் தேய்த்து மணலை வறுத்து ஒத்தடம் கொடுக்கவும். 14. காதில் சீல் தேங்காய் எண்ணெய் ஒரு அவுன்சில் ஏழு துளி கலந்து காதில் மூன்று துளி விட்டு பஞ்சில் அடைக்கவும் தவிர பாலில் மூன்று துளி விட்டு மூன்று நாள் சாப்பிடவும். 15. கண்டமாலை கட்டிகளுக்கு வேப்ப எண்ணெய் ஒரு அவுன்சில் 10 துளி ரணங்களில் தடவவும்.
16. குழந்தைகளின் மாந்தகம் மஞ்சனத்தி துளசி பொடுதலை இவை ஒன்றில் கஷாயம் செய்து தேன் விட்டு அதில் ஒரு துளி விட்டு மூன்று நாள் கொடுக்கவும்.
17. அண்டவாதம் குடல்வாதம் எருக்கலம் பூவில் மொட்டு பூ ஒன்று வெள்ளைப் பூடு பல் 1 மிளகு 5 அரைத்து அதில் துளி விட்டு இரண்டு வேளை கொடுக்கவும் மேலே மேற்படி தைலத்தை தடவி தேங்காயை துருவி அத்துடன் களர்ச்சி கொட்டை இலையையும் சேர்த்து சூடு பண்ணி ஒத்தடம் கொடுக்கவும்.
18. ஜன்னி இஞ்சி முருங்கைப்பட்டை வெள்ளைப்பூடு இவைகளைத் தட்டி சாறு எடுத்து ஒரு கரண்டி வேப்ப எண்ணெய் கலந்து ஐந்து சொட்டுகள் கொடுக்கவும்.
19. சோகை நீர் வீக்கத்திற்கு நீர்முள்ளி இலை கோவை தண்டு சுரைக்கொடி வகைக்கு கைப்பிடி எடுத்து கசாயம் செய்து இரண்டு துளி விட்டு ஒரு வாரம் கொடுக்கவும்.
 20. மூலக் கிராணி வயிற்று இரைச்சல் தான்றிக்காய் சூரணத்தில் திரிகடி எடுத்து தேனை கலந்து 2 துளி 5 நாட்கள் கொடுக்கவும்.
21. வயிற்றுக்கடுப்பு எருமை தயிரில் லவங்க கொழுந்தை சேர்த்து அரைத்து நெல்லியளவு அதில் ஒரு துளி மூன்று நாட்கள் அல்லது நாவல் பட்டை கசாயத்தில் ஒருதுளி ஆகாரம் ஜவ்வரிசியில் கஞ்சி அல்லது தயிர் சாதம் மட்டும் சேர்க்கவும்.
22. பெண்கள் பெரும் பாடு பசு வெண்ணெயில் மூன்று துளி மூன்று வேளை கொடுக்கலாம்.
23. நடுக்கல் சுரம் முந்தின  வேப்பம் பட்டை கசாயத்தில் மூன்று துளி 3 நாட்கள் கொடுக்கலாம்.
24. அஜீரணம் குளிர்ந்த நீரில் 2 துளி கொடுக்கவும்.
25. நீரடைப்பு வெள்ளரிக்காய் வாழைத்தண்டு முள்ளங்கி இவை ஒன்றின் சாரில் இரண்டு துளி கலந்து கொடுக்கவும். 26. சரீரத்தில் திடீர் தடிப்பு மதமதப்பு நீர் சம்பந்தமான சரீர உப்பிசம் காலை மாலை மூன்று துளி காப்பியில் கொடுக்கவும்.
27. தேள் பூரான் மூட்டை பூச்சி கடிக்கு பொன்னாவாரை கசாயத்தில் ஒரு அவுன்சில் சீனி போட்டு இரண்டு துளி கொடுக்கவும்.
28. ரத்த காசத்திற்கு தேங்காய் பாலுடன் தேன் கலந்து ஒரு ஸ்பூன் அளவு அத்துடன் மருந்து 2 துளி இது காலையில் பின் மாலையில் தேங்காய் பாலுடன் நெய் கலந்து இரண்டு துளி கொடுக்கவும்.
29. கரப்பான் சொறி சிரங்கு நில ஆவாரை சூரணத்தில் திருகடி பிரமாணத்தை எடுத்து ஒரு துளி விட்டுக் கொடுக்கவும் வேப்ப எண்ணெயில் கொஞ்சம் விட்டு மத்தித்து மேலுக்கு ரணங்களில் மேல் போடவும்.
30. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கட்டி வெள்ளரி விதை கசாயத்தில் ஒரு துளி வீதம் ஐந்து நாட்கள் கொடுக்கவும் .

மேற்படி 30 வியாதிகளையும்.
ஆரம்பநிலையில் இருந்தால் இந்த மருந்து குணப்படுத்தும்.

  31. தலைவலி தலைபாரம் வலி உள்ள இடத்தில் தடவி லேசாக தேய்த்து விடவும் புருவத்திற்கு மேற்புறம்  பொட்டு பகுதியில் தடவி தேய்த்து விடவும்.
32. பல் வலி பஞ்சில் தொட்டு வலியுள்ள இடத்தில் வைக்கவும் எச்சில் விழுங்க கூடாது சிறிது நேரம் கழித்து வெண்ணீரில் வாய் கொப்பளிக்கவும்.
33. தொண்டை வலி தொண்டைப் பகுதியில் லேசாக தடவி விடவும் சுடு நீரில் இரண்டு துளி விட்டு வாய் கொப்பளிக்கவும்.
 34. அடிபட்ட வீக்கம் ரத்தக்கட்டு  போன்ற இடத்தில் தைலத்தை தாராளமாக தடவி விடவும் தேய்க்கக் கூடாது காலையில் தடவி மாலையில் சுடு நீர் விட்டு கழுவவும் மாலையில் தடவி காலையில் சுடு நீர் விட்டுக் கொள்ளவும். 35. கண்ணில் நீர் குத்தல் புருவத்திற்கு கீழ் கண்ணில் படாமல் தடவி விடவும் கண்ணில் இருந்து நீர் வெளியேறி சுகப்படும்.
 36. உடல்வலி தசைவலி தேங்காய் எண்ணெயில் சில துளி விட்டு வலி உள்ள இடத்தில் தேய்த்து விடவும்.                                 மேலும் பலவிதங்களில் இதை பயன்படுத்தலாம்.
***************************************************
***************************************************

முக்கிய குறிப்பு
*****************
தைலம் கடுமையான எரிச்சலைக்கொடுக்கும் மென்மையான தோல் உள்ளவர்கள் குறைவாக பயன்படுத்தவும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க கூடாது.
***************************************************************.
அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய தைலம்.
***************************************************

M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
*********************************************

செரியாமை,மலக்கட்டு,வாயு தொல்லை நீங்க மருந்து

சஞ்ஜீவி பற்பம்.
********************
********************
தேவையான பொருட்கள்.
****************************
படிகாரம் 125 கிராம்.
நவாச்சாரம் 75 கிராம்
வெடியுப்பு 600 கிராம்

செய்முறை
*************
முன்றையும் தனித்தனியாக அரைத்து பின் ஒன்று சேர்த்து அரைத்து. ஒரு சட்டியிலிட்டு உருக்கி ஒரு பிங்கான் பாத்திரத்தில் விடவும்.இதனை ஆறியபின் நன்கு கல்வத்திலிட்டு அரைத்து எடுத்துக்கொள்க.

பயன்கள்.
************
தேகதிடம் அறிந்து காலை மாலை தேவைபட்டால் மதியம் என தகுந்த அனுபானத்தில் எடுத்து கொள்ளலாம்.

வெளுப்பு உப்பு சத்து . கால் வீக்கம். முதலிய நோய்கள் தீரும்

கடுக்காய் குடிநீருடன் எடுத்து கொண்டால் செறியமை நோய்கள் தீரும்.

பெருங்காயத்துடன் எடுத்து கொண்டால் வாயு தீரும்.

இஞ்சி சாற்றுடன் எடுத்து கொண்டால் மலக்கட்டு  தீரும்

நெருஞ்சில் சாறுடன் எடுத்து கொண்டால் சிறுநீர்கட்டு தீரும்

சுரைகொடிச் சாறுடன் எடுத்து கொண்டால் உப்பு சத்து குறையும்.

சோம்புகுடிநீர் உடன் எடுத்து கொண்டால் வயிற்று வலி தீரும்

சீரககுடிநீருடன் எடுத்துகொண்டால் கிறுகிறுப்பு .தீரும்.

 அனுபானம் அறிந்து பல நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
**********************************************************
*********************************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
**********************************************
**********************************************

சிறுநீரில் ரத்தம் வருதல் விந்து வருதல் மூலவியாதிகள் கல்லீரல் மண்ணீரல் நோய்கள்

.                  பொன்னாற்மேனியன்
                   பொன்னுடம்பை கான
               பொற்றலைக் கையாந்தகரை
      *****************************************
பொற்றலைக்கை யாந்தகரைப் பொன்னிறமாக் கும்முடலை சுத்தமுறக் காக்குஞ்சுகங் கொடுக்குஞ் - சிற்றிடையாய் சிந்தூரங் கட்காகுஞ் சிந்தை தனைத்துலக்கும்
உந்திவளர் குன்ம மொழிக்கும் ..

உடலிற்கு பொன்னிற சாயலையும் கண்களுக்கு ஒளியையும் புத்திக்கு தெளிவையும் உண்டாக்கும் குன்மக்கட்டியை போக்கி குருதியை சுத்தப்படுத்தும் இவ்வரிய கற்ப மூலிகை இதனால் பலவித செந்தூரங்கள் செய்யவும் உதவும்

5 வயது முதல் 90 வயது வரை ஆண் பெண்கள் இதை எவ்வித பத்தியமும் இல்லாமல் சாப்பிட்டு வரலாம்.

ஒரு மாதத்தில் வாக்கு சுத்தியாகும்
இரண்டு மாதத்தில் உடல் நிறம் மாறும்
மூன்று மாதங்களில் உடலில் உள்ள குருதியை( இரத்தத்தை) சுத்தப்படுத்தி  சீவனுக்கு எமனாக இருக்கும் கபத்தை போக்கி சுவாசத்தை பலப்படுத்தும்
நான்காவது மாதத்தில் சுக்கில சுரோணிதங்களை விருத்தியடையச் செய்யும்.
ஐந்து மாதங்களில் அழகையும் முகத்திற்கு வசீகரத்தையும் உண்டாக்கும்
ஓராண்டு காலத்தில் வாக்கு பலிதம் ஏற்படும்
ஐந்துஆண்டு காலத்தில் சாப்பிட்டால் மாறாத இளமையும் நீண்ட ஆயுளையும் உண்டாக்கும்
இந்த ஒரே மூலிகையை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் வைத்தியர் இடத்தில் போகும் தேவை ஏற்படாது அதாவது எந்த நோய்க்கும் உள்ளாகாமல் உடல் பலத்துடனும் மனோபலத்துடனும் விசாலமான புத்தியுடனும் நீண்ட ஆயுளுடன் வாழலாம் ஐந்து ஆண்டு காலங்கள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பல நோய்கள் நீங்கும் .

மேலும் மூத்திரத்தில் ரத்தம் வருதல் விந்து வருதல் மூலவியாதிகள் கல்லீரல் மண்ணீரல் நோய்கள் சுவாச காசம்  சரும வியாதிகள் ஆகியவை குணமாவதுடன் சரீரத்திற்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் பூச்சிகளை வெளிப்படுத்தி கிருமிகளால் ஏற்பட்ட கோளாறுகளையும் குணப்படுத்தும் உயர்ந்த கற்ப மூலிகையாகும் இம்மூலிகையை எந்த வயதினரும் சாப்பிட்டுவர வேறு எதனாலும் பெற முடியாத நற்பலன்களையும் பெறலாம்.

கற்பசெந்தூரம்.
*****************
  வெடியுப்பு. நவாச்சாரம் இரண்டையும் கொண்டு மடித்து இடித்து எடுத்த இரும்பு தூளை
கந்தகம் அரிசி சாதம் கொண்டு நான்கு முறை புடமிட்டு
கார்பன் மற்றும் துரு முழுமையாக நீக்கப்பட்ட இரும்பு தூள்
தேவையான அளவு எடுத்து கொண்டு அதில் தினந்தோரும் பொற்றலைக்கையாந்தகரை சார் விட்டு ஆறுமாதம் வெய்யல் காலத்தில் வைத்து வர வேண்டும் பின் மேல் அகல் மூடி  பெரும்புடமாக போட்டு எடுத்து கொண்டால் அருமையான  கற்பசெந்தூரம் கிடைக்கும்.
அயதங்க செந்தூரம் எல்லாம் இதற்கு ஈடாகாது.
பல்வேறு புற்று நோய்களில் சிறப்பாக வேலை செய்யும்.
இந்த செந்தூரத்தால் மேலே மூலிகையில் கூறப்பட்ட பலன்கள் கிடைப்பது திண்ணம் .   
                                                                                                                          மருதர் இன்னிசை  மாலையால் துதிக்கவே
தியானத்தில் ஆழ்ந்த. யோகிககள் கானவே ...கூடும்.

***********************************************
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
*****************************

Tuesday, 21 May 2019

வாதம்,பித்த,கப நோய் இரத்த புற்று,கன்ன புற்று

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி.
***************************************************
சித்தமருத்துவத்தின் பெருமையினை போற்றும்
                             ரசசுண்ணம்
                        *******************
பஞ்சபூதத்தின் கூட்டுறவினால் உருவானதுமான
அறுசுவையும் ஒருங்கே பெற்றதுமான
இவ்வுலகில் தோன்றியுள்ள எல்லா தாது பொருட்களுக்கும் மேம்பட்டதுமான
வெப்பம், குளிர்ச்சி என்ற இரண்டு வீரியத்தையும் பெற்றதுமான
எல்லா பொருட்களிலும் வியாபித்து இருப்பதுமான
ஜீவனின் ( சிவன் ) விந்து என போற்றப்படுவதுமான

ரசத்தை உயர்நிலை சுண்ணமாக்கி உயிர்காக்கும் மருந்தாக செய்த பெருமையும் சித்தர்களுக்கே..

ரசம் சார்ந்த மருந்துகளின் பெருமைய சித்தமரபினர்

        ஜெய சூதத்தில் மருந்து செய்தால்
                  செத்த பிணம் வாய் பிளக்கும்   .என்பார்கள்.

.                           ரசசுண்ணம்
                        *****************

        மேக நோய் வாத பித்த கப தொந்தரவுகள் தொந்த நோய்கள் ரத்தப்புற்று கண்ணப்புற்று குறிப்புற்று கண்டமாலை பிளவை விப்புருதி காளாஞ்சக படை கரப்பான் வாதம் கீழ்வாயு குணமாகும் கிருமிகளைக் கொல்லும் ரத்த சுத்தி மூளை பலம் நரம்பு பலம் உண்டாகும் உடல் இறுகி உரம் பெறும்( ஜெய சூதத்தில் மருந்து செய்ய செத்த பிணமும் வாய் பிளக்கும்) எங்கு நெறி கட்டினாலும் குணமாகும் வீக்கம் கரையும் இரத்தம் சுத்தமாகும் கிருமிகளைக் கொன்று புண்களை ஆற்றும் மூளையை வலுப்படுத்தி ஞாபக சக்தியை தரும் முக அழகு உண்டாகும்.
இறை  ஆற்றல் மிகும்.

M.s.சித்தா சிகிச்சை&ஆராய்ச்சி மையம்.
கல்பகனூர்.
Ph:9443853756.Siddha maruthuvam

Friday, 17 May 2019

தாது விருத்தி

காமரூபி லேகியம்
**********************
**********************

தேவையான பொருட்கள்:
****************************
வால் மிளகு 50 கிராம்
லவங்கப்பட்டை 50 கிராம்
குல்கந்து 50 கிராம்
அக்கரகாரம் 50 கிராம்
ரூமஸதகி 25 கிராம்
கடலை மாவு 25 கிராம்
சாதிக்காய் 25  கிராம்
போஸ் தங்காய் 25 கிராம்
குரோசானி ஓமம் 25 கிராம்
முள்ளிளவம் பிசின் 25 கிராம்
லவங்கம் 25 கிராம்
சாதி பத்திரி 25 கிராம்
சுக்கு 25 கிராம்
குங்குமப்பூ 5 கிராம்

செய்முறை:
**************
குல்கந்து குங்குமப்பூ இரண்டையும் தவிர மற்ற சரக்குகளை வெயிலில் உலர்த்தி இடித்து சலித்து எடுத்து கல்வத்தில் இட்டு தேவையான அளவு தேன் சேர்த்து அரைத்து மெழுகு பதம் வரும்போது சுத்தி செய்த குங்குமப்பூ குல்கந்து கலந்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

உபயோகிக்கும் முறை:
*************************
2 வராகன் எடை லேகியத்தில் அரிசி எடை அய செந்தூரம் சேர்த்து காலை மாலை என இருவேளை 20 நாட்கள் சாப்பிட வேண்டும்
மருந்து எடுத்துக் கொள்ளும்போது 250 மில்லிலிட்டர் பசும்பால் காலை மாலை குடிக்க வேண்டும் உணவில் நெய் மோர் தயிர்  சேர்ப்பது நல்லது .

தீரும் நோய்கள்:
******************
தாது விருத்தியாகி நீர்த்தாரை சிறுத்து அதிக மகிழ்ச்சி உண்டாகும்
*******************

M .S . சித்தா சிகிச்சை மையம்
மு.சுகவனேஸ்வரன்
9443853756
https://www.facebook.com/ramyaadhavan.adhavan
************************************
************************************

குறட்டை விடுதல்

குறட்டை குணமாக
***********************.
தும்பை   பூ                    ---- 10 கிராம்
மரசெக்கில் ஆட்டிய
சுத்தமான நல்லெண்ணைய்--- 100 மில்லி

இரண்டையும் பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில்
போட்டு சூரியபுடம் 10 நாள் வைத்து சுத்தமான துனியால்
வடிகட்டி பத்திரபடுத்தவும்.

இதை இரவு படுக்கும் போது இரண்டு மூக்கிலும்
இரண்டு அல்லது மூன்று சொட்டு வீதம் விட்டுவரவும்.

**********************************************************
**********************************************************.
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்
மு.சுகவனேஸ்வரன்
9443853756
**********************************************************

Thursday, 16 May 2019

பல்வழி,ஈறு வீக்கம்,வாய்நாற்றம்

.                                  தந்தச்சுத்தி
                              *****************
            தந்த சுத்தி என்றால் பல் துலக்குவதுதான்.
 பல் துலக்குதல் என்பது பல்லை வெண்மையாக வைத்துக் கொள்வது மட்டுமல்ல பல் ஈறுகள் கரையாமல் பாதுகாக்கவும் பல் ஈறுகள் உறுதியாகவும் பல்லின் வேர்ப்பகுதி நன்றாக இருக்கவும் பித்தநீரை அகற்றவும் நீண்டநாட்கள் பல் விழாமல் உறுதியாக இருக்கவும் செய்யக்கூடிய செயலாகும் .

           சித்தர்கள் கூறிய மிக உயர்ந்த உன்னதமான தந்த சூரணம் .

தேவையான பொருட்கள்:
****************************
வேப்பம் பட்டை சூரணம் 100 கிராம்.
 கருவேலம் பட்டை சூரணம் 100 கிராம்
ஆலமர விழுது பட்டை சூரணம் 100 கிராம் .
நாயுருவி வேர் பட்டை சூரணம் 75 கிராம்
கடுக்காய் சூரணம் 100 கிராம்.
இந்துப்பு சூரணம் 125 கிராம் .
கிராம்பு சூரணம் 60 கிராம் .

செய்முறை: .
*************
மேற்கண்ட அனைத்தையும் ஒன்று கலந்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் .

உபயோகிக்கும் முறை:
**************************
        இந்த சூரணத்தைக் கொண்டு காலை இரவு
இரு வேளை அல்லது காலை மட்டும் வலது கை ஆட்காட்டி விரல் கொண்டு பற்களையும் ஈறுகளையும் நன்றாக தேய்த்து பின் வெந்நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும் .

தீரும் நோய்கள்:
******************
மேற்கண்டவாறு தொடர்ந்து செய்வதனால் பற்களும் ஈறுகளும் வலுவடைவதுடன் பற்களில் உள்ள கரைகள் ஈறு வீக்கம் வாய் நாற்றம் பல் அசைவு ஆகிய நோய்கள் நீங்குவதுடன் பற்கள் இறுகி வலுப்பெறும் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்து முகவசியம் அழகு உண்டாகும்.

**********************************************
M.S.சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
******************************************
******************************************

இளநரை,பித்த நரை

கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடி.
*************************************************
        பொன்னாங்கண்ணி கீரை அரைத்த விழுது அதில் பத்தில் ஒரு பங்கு சுத்தி செய்த மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து அரைத்து சிறு நேல்லிக்காய் அல்லது இலந்தைப்  பழ அளவு உருட்டி நிழலில் காய வைத்து அப்படியே சுத்தமான காய்ச்சிய தேன் விட்டு வைக்கவும்.

         இதை காலையில் ஒரு உருண்டை மாலையில் ஒரு உருண்டை என 60 நாள் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வர. இளமையில் வரும் பித்த நரை மாரும்.நரம்பு மண்டலங்கள் சுத்தமாகும். கண்ணுக்கு இது ஒரு சிறப்பான மருந்தாகும்.தலை முடியும் சிறப்பாக இருக்கும்.

        இது ஒரு சிறந்த முறை அனைவரும் எளிதாக செய்து பயன்படுத்தலாம்.

********************************************
மு.சுகவனேஸ்வரன்
9443853756
********************************************

Tuesday, 14 May 2019

மதன காமேஸ்வர லேஹியம்

சித்த மருத்துவத்தின் வயகரா.
***********************************
மதனகாமேஸ்வர லேகியம்
(ஆதாரம்- ஆத்மரக்ஷாமருதம்)
***********************************
வீரிய விருத்தியை உண்டாக்கும்
நரம்பு தளர்ச்சியை போக்கும்
தாம்பத்யத்திற்க்கு பிறகு ஏற்படும்
உடல் சோர்வு.அசதி.பலஹீனம்
போன்றவைகளை நீக்கும்.
வீரியத்தை அதிகபடுத்தி
நீண்ட நேர இன்பத்தை கொடுக்கும்
**********************************************.
மருந்து சாப்பிட்ட 2 மணி நேரத்தில் பலன் தேரியும்

**********************************************.
M. S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
**********************************************
**********************************************

மன்மத தைலம்

மன்மத தைலம்
******************
******************
பாதாம் பருப்பு                 -250 கிராம்
அக்ரூட் பருப்பு                 - 250 கிராம்
கோரக்கர் மூலிகை        -100 கிராம்

மூன்றையும் நன்கு அரைத்து குழித்தைலம் இறக்கி தேக திடம் அரிந்து பயன் படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும். .

இந்த தைலத்தை. தாது லேகியத்துடன் கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

***********************************************
***********************************************

Saturday, 11 May 2019

Siddha maruthuvam: இரத்த சோகை,உடல் சோர்வு

Siddha maruthuvam: இரத்த சோகை,உடல் சோர்வு: அயரச களங்கு . *****************          அன்னபேதி செந்தூரம்.அயசெந்தூரம். போன்றவைகளை விடப் பண்மடங்கு அதிகமாகவும் விரைவாகவும் வேலை செய்யும்...

இரத்த சோகை,உடல் சோர்வு

அயரச களங்கு .
*****************
         அன்னபேதி செந்தூரம்.அயசெந்தூரம். போன்றவைகளை விடப் பண்மடங்கு அதிகமாகவும் விரைவாகவும் வேலை செய்யும்.
******************************************
         இரத்தத்தை நன்கு உற்பத்தி செய்யும்.இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.சோகை பாண்டு. காமாலை..உடல்  பலவீனம்.உடல் சோர்வு. ஆகியவை நீங்கும்.உடலை தேற்றும். சுண்ணங்களுடன் சமயோசிதமாகச் சேர்த்துக் கொடுக்க குறுகிய காலத்தில் நல்ல குணமடைவதைக் காணலாம்.

          வாதம். சொரியாஸிஸ்.உடல் வலி. தலை வலி. சரவாங்கி வாதம்.வெரிக்கோஸ் வெய்ன். பித்தம் அஜீரணம்.குன்மம்.இரத்தகுறைவு. ஆகியவை தீரும்.இரத்தம் சுத்தமாகும்.நன்கு பசி எடுக்கும். சுக்கில நட்டம் நீங்கும்.

           இளமையைப் பாதுகாத்து வயோதிகத் தோற்றத்தைத் தள்ளிப்போடும். உள் அழல் போக்கி இரத்தத்தைச் சுத்தம் செய்து இரத்தத்தைத் தரமானதாக மாற்றி உடலை போஷிப்பதில் மிக அற்புதமான மருந்தாகும்.    கப நோயாளிகளுக்குக் கொடுக்க கூடாது.              *********************************************
       
          இந்த அயரச களங்கை பயன்படுத்தி தாமிரக் குரு எற்ற தாமிரக் கற்பம் செய்யலாம்.

********************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
 9443853756.

  • ********************************************

தலைவி,தலை பாரம்

சகலவிதமான மண்டையிடியையும் குணப்படுத்தக்கூடிய அற்புதமான தைல முறை.  ( சுடர் தைலம்)                                                                                                                                                                                                        பெரிய பெரிய மண்டையிடிகளை எல்லாம் எளிதில் குணப்படுத்தி விடும் எனவே இதற்க்கு பேரிடி தைலம் என பெயர்.                                                                                                      எருக்கலம் இலை சார் 250 மில்லி.                                                                                                                                                                                                                                                                  தைவேளை சார் 250 மில்லி.                                                                                                                                                                                                        நல்லெண்ணை 1 லிட்டர்.                        நயம் சாம்பிராணி 40 கிராம்.                                                     மிளகு 20 கிராம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                கருஞ்சீரகம் 10 கிராம்.                                       கொடிவேலி வேர் தொலி 10 கிராம்.    4 முதல் 7 வரை உள்ள சரக்குகளை நன்கு பொடித்து எண்ணையில் போடவும். 1. 2 சார்களையும் எண்ணையில் விடவும். கலக்கி நிர் வற்ற காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும்.பின் 250 கிராம். சுக்கை நன்கு பொடித்து மேற்படி எண்ணையை சிறிது விட்டு குழப்பி ஒரு துணியில் பொட்டலமாக கட்டி அந்த பொட்டலத்தை சிறு கம்பியால்  அவிழ்ந்து விடாதபடி சற்று இறுக்கமாக கட்டி அதனை ஒரு கம்பியில் கட்டி தொங்கவிடவும். பின் பொட்டலத்தில் நெருப்பு பற்ற வைக்கவும் . இப்போது பொட்டலம்  எரியும் .பொட்டலத்திற்க்கு நேராக ஒரு இரும்பு சட்டி கீழே வைக்கவும். இப்போது நாம் ஏற்கனவே தயாரித்து வைத்து இருக்கும் எண்ணைய கொஞ்சம் கொஞ்சமாக எரியும் பொட்டலத்தின் மீது விடவும். அது பொட்டலத்துள் இறங்கி பின் கீழே வைக்கப்பட்டுள்ள சட்டியில் விழும். இவ்வாறு  எண்ணை  முழுவதும் விட்டு கீழ் பாத்திரத்தில் சேகரித்து எடுக்க வேண்டும்.பின் கம்பியில் இருக்கும் பொட்டலத்தை தலைகீழாக மாற்றி கட்டி இந்த எண்ணையை விட்டு இதேபோல் மீண்டும் ஒரு முறை செய்யவும்.                                                                                                                                          எப்படி பட்ட தலைவலியாக இருந்தாலும்  இதில் குணமாகியே தீரும்.இந்த தைலம் தயார் செய்ய உழைப்பு அதிகம் என்றாலும் பயன்பாடு அதிகம் ஒவ்வொரு மருத்துவர்களும் தயார்  செய்து பயன்படுத்தவும்.                                                                 இரண்டு முறை சுடர் வாங்கியபின் சுமார் 500 மில்லி தைலம் கிடைக்கும்.                                                 பயன்.                                                                    30 மில்லி தைலம் காலையில் தலையில் தேய்த்து 6 மணி நேரம் கழித்து வென்னீரில் குளிக்க. வாத. பித்த.கப  குற்றங்களால் வந்த எந்த தலைவலியும் போய்விடும். சாதாரண மண்டையிடியாக இருந்தால் ஒரே நாளில் குணமாகிவிடும்.வருடக்கணக்காக இருக்கும் மண்டையிடி வாரம் ஒரு முறை என 3 அல்லது 4  தடவை குளிக்க குணமாகிவிடும்.மிக அருமையான தைலம்.                   தைலம் தேய்த்து குளிக்கும் அன்று பகல் உறக்கம் கூடாது.அசைவம் சாப்பிட கூடாது.உடலுறவு கூடாது. வாத பித்த கப ங்ளை கூட்டகூடிய உணவுகளை தவிர்த்து எழிதில் ஜீரனிக்ககூடிய உணவுகளை எடுத்துகொள்ளவும்.                                                                                                                                                        சித்த மருத்துவர்.                                              M.சுகவனேஸ்வரன் . SMP

சர்க்கரை நோய்

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய்
**********************************.         பழங்காலத்தில் இயற்கையான முறையில் தழை உரம் .சாணம் .மக்கிய எரு போன்றவற்றை பயன்படுத்தி காய் கனிகள் தானியங்கள் பயிரிட்டு பயன்படுத்தி வந்தார்கள் ஆறு மாதம் வரை வளரக்கூடிய நெல்லை பயன்படுத்தினார்கள்  மற்றும் பாலீஸ் செய்யப்படாத கைக்குத்தல் அரிசியை உணவாக உட்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் நம் நாட்டின் உணவு முறையே நோயின்றி ஆரோக்கியமாக வாழும் முறையாகவே அமைந்திருந்தது ஆனால் இன்றைய காலகட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக தேவை அதிகம் ஏற்படுவதால் ரசாயன உரம் மருந்து போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தி மூன்று மாதத்தில் விளையக்கூடிய நெல் காய்கறிகள் போன்றவற்றை உண்ணும்போது அந்த உணவே நம்மை நோய்க்கு உட்படுத்துகிறது மேலும் அன்னிய கலாச்சாரம் வீட்டில் உள்ள ஆடம்பர பொருட்கள் எல்லாம் சேர்ந்து மனிதனுடைய உடல் உழைப்பை குறைத்துவிட்டது மேலும் அன்பு பாசம் கூட்டுக்குடும்பம் போன்றவற்றிலிருந்து விலகி பொறாமை போட்டி வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் வேலைப்பளு போன்றவற்றால் கவலை கலக்கம் பதற்றம் மந்தம் சோம்பேறித்தனம் பயம் போன்றவற்றால் மனம் அதிகமாக  உளைச்சலுக்கு உட்பட்டு நைய்யப்படுகிறது இதனால் உடம்பில் வெப்ப நிலை மாற்றம் ஏற்படுகிறது உடலில் அசுத்த வெப்பம் கூடுகிறது ரத்தமும் சூடேறுகிறது இதுபோன்ற நிலை நீடிக்கும் பொழுது இந்த வெப்பநிலை மாற்றத்தால் நாம் உண்ணும் உணவு ஜீரணிக்கப்படுவதில்லை முறையான ஜீரணம் நடைபெறாத போது தரமான குளுக்கோஸ் கணையத்திற்கு கிடைப்பதில்லை இதனால் கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பது இல்லை . சரியாக செரிக்கப்படாத உணவுமூலமாக கிடைக்கும் சர்க்கரையானது உடம்பிற்கு தேவையான ஆற்றலாக மாறுவதில்லை மாறாக அப்படியே ரத்தத்தில் கலந்துவிடுகிறது இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படுகிறது சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது இந்த நிகழ்வை urine sugar என அழைக்கின்றோம் மேலும் சர்கரை நோயாளிகளுக்கு பல்வேறு அறிகுறிகள் தோன்றும் ஒவ்வொருவரும் பல்வேறு விதமான அறிகுறிகளை கூறுவார்கள் இதற்கு சரியான காரணம் உடம்பில் எந்த உறுப்பை அதிகமாகவும் எந்த நேரமும் வேகமாகவும் இடைவிடாமலும் பயன்படுத்தி வேலை செய்கிறோமோ அந்த உறுப்புக்கு அந்த இடத்தில் உள்ள செல்கள் பணிபுரிய அதிக ரத்த ஓட்டம் தேவைப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிறது அடர்த்தி மிகுந்த ரத்தம் அந்த இடத்தில் பாய்வதால் அந்த இடத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு தேய்மானம் ரத்த கசிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அந்த உறுப்பு நோயின் அறிகுறியாக மாறும் இதுவே கண் பார்வை மங்கள் கை கால் பாதம் மருத்து போதல் பிறப்புறுப்புகளில் நமைச்சல் புண் கொப்புளம் போன்ற அறிகுறிகள் தோன்றும் மற்றும்  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி சிறுநீரில் சர்க்கரை அதிகமாகும் போது அடிக்கடி சிறுநீர் கழித்தல் அதிக தாகம் உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும் முறையற்ற வெப்பநிலை மாற்றம் அதிகப்படியான மூலச்சூடு போன்றவற்றால் மூலவாய்வு அதிகரிக்கப்பட்டு முறையற்ற  செரிமானம். அதனால் தரமான குளுக்கோஸ் இன்மையால் கணையம் இன்சுலினை சுரக்காமல் இருப்பதே சர்க்கரை நோய்க்கு முக்கியமான முதன்மையான காரணமாகும் இது ஒரு நோய் அல்ல இதற்கு இயற்கையான முறையில் மூலிகை களால் ஆன மருந்துகளை சித்த மருத்துவர்களிடம் முறையாக எடுத்துக்கொண்டால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வாழ்நாள் முழுக்க சக்கரையின் அளவு அதிகரிக்காமல் பல உறுப்புகளை இழந்து அவதியுறும் நிலை ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
**************************************
சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் பத்தியமுறைகள் நாளை பதிவிடுகிரேன்.
**************************************

விறைப்பு தன்மை ,நீண்ட நேரம் இல்லற இன்பம்

இல்லற இன்ப குளிகை.
**************************.
1 வெள்ளைக் குன்னி முத்து உள் இருக்கும் பருப்பு தோலா - 1
2 சிறு பூனைக்காலி தோலா - 5
இவ்விரண்டையும் வெகு நேர்த்தியாக தண்ணீர் விட்டு அரைத்து உருட்டி அதன் உள்ளே வைப்பு அபின் தோலா கால் வைத்து உருட்டிப் பொதித்து கொள்ளவும்
ஒரு சட்டியில் தண்ணீர் விட்டு வேடு கட்டி அதில் மேற்படி மருந்தை வைத்து மூடி 7 நிமிடம் அடுப்பில் வைத்து தீ எரிக்கவும் பின் இறக்கி ஆறிய பின் எடுத்து தேங்காய் பால் விட்டு அரைத்து உழுந்து அளவு உருண்டை செய்து வைத்துக் கொள்க ஆள் தரம் கண்டு 1 அல்லது 2 மாத்திரை இரவு 7 மணிக்கு சாப்பிட்டு பால் குடிக்கவும் பின் புளி சேர்ந்த ஆகாரம் எதுவும் சாப்பிட கூடாது இனிப்புச் சாப்பிடலாம் 9   மணிக்கு மேல் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் நல்ல விரைப்பு தன்மையும் நீண்ட நேர இன்பமும் முழு திருப்த்தியும் கிடைக்கும் தாது லேகியம் இருந்தால் மாத்திரையுடன் எடுத்து கொண்டால் நல்லது
***********************************************************
**********************************************************

வயிற்று உப்புசம்,வாயு தொல்லை

ஓங்குகின்ற மலக்கட்டை ஒழிய வைத்தால் உடலில் உள்ள வாதை எல்லாம் ஒடுங்கி போகும்.
**************************************
**************************************
சூரத்தாவாரை லேகியம் .
***************************
சுத்தி செய்த சூரத்தாவாரை சூரணம்     2 கிலோ                                 நாட்டு ரோஜாப்பூ சூரணம்                         1 கிலோ                    திரிபலா சூரணம்                                         1 கிலோ          ஏலக்காய் சூரணம்                                       300 கிராம் வாய்விளங்கம்                                              250 கிராம் நன்குசுத்தித்த நேர்வாள பருப்பு              75 கிராம்               விதை நீக்கிய பேரிச்சம் பழம்                   2 1/2கிலோ. உலர்ந்த. திராட்சை                                      300 கிராம்          சர்கரை                                                            15 கிலோ                 தேன்                                                                2 1/2 கிலோ            நெய்                                                                 2 1/2 கிலோ. பசும்பால்                                          தேவையான அளவு. சுண்ணாம்பு தெளிவுநீர்              தேவையான அளவு. செய்முறை
*************.
முதல் 6 சரக்குகளை சுத்தி செய்து தனித்தனியாக அரைத்து சலித்து ஒன்று கலந்து எடை பிரகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும் பின் பேரிச்சம் பழம் உலர்ந்த திராட்சை இரண்டையும் தனித்தனியே  சுடுபாலில் ஊற வைத்து தனித்தனியே பாலில் அரைத்து கற்கமாக எடுத்து கொள்ள வேண்டும் பின் சுண்ணாம்பு தெளிவு நீரில் சர்க்கரயை கலந்து பாகு காய்ச்ச வேண்டும் பாகுபதம் வந்தவுடன்  பேரிச்சம்பழம் உலர்ந்த திராட்சை கற்கத்தை கலந்து கொதிக்க வைக்க வேண்டும் நீர் வற்றியதும் இறக்கி வைத்து கலந்து வைத்துள்ள சூரணங்களை தூவி நன்கு கிளறி விட வேண்டும் பின் தேன் விட்டு நன்கு கிளறி விட வேண்டும் பின் 12 மணி நேரம் கழித்து நன்கு சூடு ஆறியதும் நெய் உருக்கி ஊற்றி நன்கு கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை.
*************************.
தேகபலத்திற்க்கு தகுந்தாற்போல்                                             இரவில் உணவுக்கு பின் 5 முதல் 7 கிராம்                                வீதம் சுடுநீரில் கொடுக்க வேண்டும் ..                                       தீரும் நோய்கள் .
******************
வயிறு உப்பிசம் மலச் சிக்கல் வாய்வு கோளாறு தொப்பை இருதய வாய்வு அபான வாய்வு தேக்கம்  உடலில் தேங்கி இருக்கும் மிகுதியான வாய்வு நீக்கம் பெரும் .(மலத்தால் வாதம் போகும்) மிகவும் அற்புதமான லேகியம் ஒவ்வொரு மருத்துவரிடமும் இருக்க வேண்டிய மருந்து
***********************************************.
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வன்.
செல்-9443853756.
*********************************************
*********************************************.

இளமையாக இருக்க

என்றும் இளமையுடன் இருக்கவும்.
**************************************
நோய்யனுகா தேகத்தை பெறவும்.
*************************************.
சுத்தி சுக்கு தூள்        -  100  கிராம்.
சுத்தி மிளகு தூள்      -  100. கிராம்
சுத்தி திப்பிலி தூள்   -  100. கிராம்
கல்வத்தில் இட்டு, சோற்று கற்றாலை சோறு எடுத்து நன்கு கழுவி அத்த சோறு போட்டு 1 நாலைக்கு  1 ஜாமம்  அரைத்து கல்வத்தோட வெய்யலில் போடவும் அடுத்து நாள் 1 ஜாமம் அரைத்து வெய்யலில் போடவும் இதே போல் தேவையான அளவு ,  சோற்று கற்றாலை சோறு போட்டு 15 நாள் அரைத்து காயவைத்து கேப்ஸியுலில் அடைத்து காலை - 1, மாலை - 1.    வருடத்திற்க்கு ஒரு மண்டலம்  சாப்பிட்டுவர. யாதொருநோய்யும் அனுகாது..இதனால் அனேக நன்மை உண்டு.(என்றும் இளமை என்றால் முதுமையை தள்ளி போடும்)
****************************************
M.S. சித்தா சிகிச்சை &  ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
செல்- 9443853756.
****************************************
****************************************.

கெட்ட கொழுப்பு நிங்க

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு நீங்க.
இரத்த கொதிப்பு சீராக.
****************************
தோல் நீக்கிய நல்ல தரமான பூண்டு 5 பலம்..        தேவையான அளவு முப்பு சிலாசத்து பஸ்பம் இரண்டையும் நன்கு அரைத்து மொச்சை அளவு மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வெயிலில் வைத்து எடுக்கவும்.
****************************************************         . காலை- 2. மாலை- 2 சுடுநீரில் கொடுக்கவும்..
************************************************.

ஆண்குறி தளர்ச்சி,போக சக்தியை அதிகரிக்க

இல்லற இன்ப செந்தூரம் .
*******************************.
நேற்று பதிவிட்ட செந்தூரத்தின் தொடர்ச்சி
***********************************************
இந்த மருந்தை சாப்பிட விருப்பம் உள்ளவர்கள்  இரவில் போஜனம் செய்து விட்டு சிரிது நேரம் கழித்து                           
தாம்பூலம் தரித்து அத்துடன் ஒரு வெற்றிலையில் முழுத்துவரை அளவு செந்தூரம் மேல் மொட்டு நீக்கிய  லவங்கம் ஒன்றும் முழு கடலை அளவு சாதிக்காய் இம் முன்றும் ஒரு வெற்றிலையில் மடித்து. வாயில் இருக்கும் தாம்பூலத்துடன் மொன்று தின்று விட்டு அரை நாழிகை கழித்து கால்படி பால் சாப்பிட வேண்டியது. இப்படி இரவில் ஒரே வேளையாக. 8  முதல் 13 நாட்கள் உடல் தகுதிக்கு தகுந்தார்போல் சாப்பிட வேண்டியது.  .எல்லா காய்கறிகளும் கீரை வகைகளும் பால், தயிர், மோர், நெய் .சகலமும் சாப்பிடலாம் . இந்த செந்தூரத்தால் அடையும் பிரதியுபகாரம் என்ன என்றால் திரேகத்தில் உள்ள எல்லா நரம்பு சோர்வையும் போக்கி நல்ல வலுவை உண்டாக்கும் . எல்லா நரம்புகளின் முடிச்சுகளாகவும்  பெரு நரம்பாகவும் உள்ள ஆண் குறியின் தளர்ச்சியை நீக்கிப் போக சக்தியை ஆதிகரிக்கச் செய்யும்.  இந்தச் செந்தூரமானது உடம்பிலே வியாபித்து ஊறும் இடத்து தன்னிறம் போலவே தேகத்தைப்  பொன்னிறம் போல் மினுமினுப்பாய் பிரகாசிக்கச் செய்யும் . அதாவது தேகத்திலும் முகத்திலும் சிவந்த காந்த சக்தியை உண்டாக்கும்.மேற்கூரிய இவ்வளவும் கொடுக்குமா
என்பதற்கு அடையாளம் யாதெனில் இந்த செந்தூரம் தின்ன ஆரம்பித்தவர்களுக்கு இதற்கு  முன்னிருந்து தேக சிக்தியும் ஜீரன சக்தியும் தங்களுக்கே தெரியும். அன்றியும் பிரதி காலையில் மலங்கழிக்க உட்காரும் போது மலம் யாவும் ஒரே கம்பியாக பிரவிருத்தியாகிவிடும் இந்த செந்தூரத்தைத் தின்பவர்கள் சுமார் இரண்டு மாத காலம் போகம் செய்யாமல் இருந்தால் அநேக வருடங்கள் தாது புஷ்டி குறையாமல் இருப்பார்கள் சுரம் முதலிய வியாதிகள் அணுகாது மிக நல்ல முறை புளி அசைவம் மது உடலுறவு அகத்திக்கீரை பாவற்காய் புகையிலை புகை இவற்றை நீக்கி பயன்படுத்தினால் நல்ல பலனை அடையளாம் பித்த தேகத்தினர் .பித்த நாடி தன்னிலையில் இருந்து அதிகமாக அடிக்கும் தேகத்தினர் போன்றவர்களுக்கு மருந்து கொடுக்க கூடாது .இது போன்ற தேகத்தினர்களுக்கு அசுத்த வெப்பத்தை  நீக்கி  சுத்த வெப்பத்தை கூட்ட வேண்டும் .இது மிகவும் நல்ல மருந்து முற்காலத்தில் அரன்மனை வைத்தியர்கள் அரசர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கையாளபட்டு வந்த மருந்து ஒவ்வொரு மருத்துவர்களிடமும் இருக்க வேண்டிய  மருந்து.
***********************************************
***********************************************c
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
செல்-9443853756.
************************
************************.

ஆண்குறி தளர்ச்சி,போக சக்தியை அதிகரிக்க

இல்லற இன்ப செந்தூரம்.
*****************************
*****************************.
9 முறை சுண்ணாம்பு கல்லில் சுத்தி  செய்த.                        தாளகம்  - 10 விராகன் எடை.
9 முறை பால் இழநீர் மருதானி பச்சைகற்பூரம்  கொண்டு சுத்தி செய்த
நெல்லிக்காய் கந்தகம்   -  விராகன் எடை.
********************************************
இவ்விரண்டையும் கல்வத்தில் இட்டு மிக நன்றாகப் பற்பம் போல் அரைக்கவவும்.   பின் சிறு குடுவையில் அதனைப் போட்டு கரி அடுப்பில் வைத்து  ஊதவும். இரண்டு நிமிடங்களில் மெழகு போல் உருகி வரும். அவ்வாறு உருகி வரும் சரக்கை தென்னம் ஈரிக்கினால் கிளறி அந்த ஈர்க்கை தூக்கும் போது சரக்கானது நூல் இழைபோல் நீண்டு வரும் . அந்த பக்குவத்தில் இறக்கி வைத்து விடவும். ஆறிய பின் மருந்து ஒட்டாது இருக்கும். பின் சட்டியை உடைத்து மருந்தை எடுத்து கலவத்தில் இட்டு ஒரு ஜாமம் நன்கு அரைத்து பின்சீசாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதனுடைய நிறமும் ஊட்டமும். பிரகாசமும் தங்கச் செந்தூரம் போல் இருக்கும். இதில் தாளகத்தையும் கந்தகத்தையும் நல்ல முறையில் சுத்தி செய்து உபயோகிக்க வேண்டும் இந்த மருந்தை பலருக்கு கொடுத்து நல்ல குணம் கண்டு உள்ளேன் பக்குவம் தப்பாது திறமையாக மருந்தை செய்ய வேண்டும் பக்குவம் தப்பினால் பலன் குறையும் .

******       இதை சாப்பிடும் முறையும்
****************    பலன்களும் நாளை
**********************   பதிவிடுகிறேன்.
******************************************
*****************************************************.
*****************************************************.
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்..
மு.சுகவனேஸ்வரன்.
செல்-9443853756.
******************************************************.

சளி,இருமல்,மூச்சுதினறல்

மகா விஷ்ணு மாத்திரை & கேப்சூல்.
****************************************.
1. நாய் தூளசி இலை                  -100 கிராம்
2.முசுமுசுக்கை இலை                 - 100 கிராம்
3. தூதுவளை இலை                   - 100 கிராம்
4. கண்டங்கத்திரி வேர்ப்பட்டை- 100 கிராம்
5.குரு மிளகு                                   - 200 கிராம்

மேற்கண்ட சரக்குகளை நிழலில் உலர்த்தி வானலியில் இட்டு அடுப்பேற்றி இலேசாக வதக்கி எடுத்துக் கொண்டு மிளகைத் தனியாக இடித்து எடுத்துக் கொண்டு. முதல் கண்டங்கத்திரி வேரை அரைத்து தூள் ஆன பின் மற்ற சரக்குகளைப் போட்டு மிளகுப் பொடியையும் கூட சேர்த்து ஒரு மணி நேரம் அரைக்க வேண்டும் பிறகு கருந்துளசி சாற்றில் 3 மணி நேரம் அரைக்க வேண்டும் பிறகு அப்படியே நிழலில் உலகத்தி நன்றாக காய்ந்த பிறகு அரைத்து தூள் செய்து காலி கேப்சூலில் அடைத்து வேளைக்கு 2 கேப்சூல்கள் வீதம் வென்னீரில் சாப்பிட்டு வந்தால் சளி சுரம் இருமல் கபகட்டு மூச்சுத் திணறல் முதலியன குணமாகும் ஆஸ்துமாவின் வேகம் தணியும் தெடர்ந்து 3 மாதம் வரை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம் .
************************************************************.
M.S. சித்தா சிகிச்சை &  ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
செல். 9443853756.
******************************
******************************

மாதவிடாய் பிரச்சனை,அதிக இரத்தபோக்கு

பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு
****************************************
****************************************
பெண்ணுக்கு மாதவியாய் காலத்தில் அதிக வயிற்று வலி ஏற்பட்டால் அதனை சூதகவலி என்பர் இதற்க்கு வீட்டு விலக்கு நாட்களில் பிரண்டை உப்பு கொடுத்தாலே நல்ல குணம் காணும்.  அதிகமான இரத்தப் போக்கு ஏற்படுவதை துவாலை இரைப்பு என்பர். இதற்க்கு.

1. பூங்காவி -    200 கிராம்
2 .கந்தகம் -      1 களஞ்சி
                                                                                            இரண்டையும் நுணுக்கி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்
4 அரிசி எடை தேன் அல்லது வெண்ணையில் கொடுக்க வேண்டும் ஒரு நாளைக்கு , 3 வேளை இவ்வாறு 11 பொழுது கொடுக்க குணம் .மிக அதிகமாக இருக்குமானால் 6 அரிசி எடை அளவும் கொடுக்கலாம் பத்தியம்.புளி. அசைவம்.மது.உடலுறவு. அகத்திக்கீரை.பாவற்காய்.ஆகாது. சூடான ஆகாரம் கூடாது எதைச் சாப்பிட்டாலும் ஆற வைத்து சாப்பிட வேண்டும் காரம் குறைக்கவும் போகம் கூடாது.
சிலறுக்கு கர்ப்ப பைய் நஞ்சிபோகி உதிரம் நிற்க்காமல் போய் கொண்டே இருக்கும் கர்ப்ப பயை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறுவார்கள் .அந்த நிலையில் குரு வண்டு என்ற பஸ்பத்தை ஒரு நாளைக்கு 6 வேளை கொடுத்தால் உதிரம் நின்று விடும். 3 முதல் 5 நாளைக்கு கொடுத்தால் சரியாகிவிடும்.
*******************************************
M S சித்தா சிகிச்சை ஆராய்ச்சி மையம்
மு சுகவனேஸ்வரன்
செல் 9443853756.
********************************************

சிறுநீரில் இரத்தம் வருதல்

குங்கிலியக்குடி
*****************.
*****************.
நீர்த்தாரையில் வரும் பிணிகளுக்கு.
***************************************.

 வெள்ளை போதல் மூத்திரத்தில் இரத்தம் போதல் அதிக மஞ்சளாக மூத்திரம் போதல் இப்பிணி  மேகநோயால் உண்டாகக் கூடியது. உஷ்ணத்தால் வரும் எரிவு மற்றும் சிறுநீர் கடுப்பு இதற்கு அனுபவமுறை.
*******************************************..                                  இளநீர் அரைலிட்டர் அதில் வெத்திலைக்கு உபயோகிக்கும் சுண்ணாம்பு கொட்டைப் பாக்களவு கலக்கி தெளிவு, எடுத்து ஒரு அவுன்சு நல்லெண்ணை விட்டு கலக்கி அதில் 3 கிராம் வெள்ளைக் குங்கிலியத்தை பொடி செய்து போட்டு கலக்கி வைத்துக் கொண்டு காலை மாலை இரண்டு அவுன்சு வீதம் உள்ளுக்குக் கொடுக்கவும் கொடுத்த 48 மணி நேரத்தில் மேற்படி வியாதிகள் குணமாகும் 3 அல்லது 4 வேளைக்கு மேல் கொடுக்க கூடாது ஏனெனில் மிகுந்த குளிர்ச்சியை உண்டாக்கி கபம் முதலியவற்றை உண்டாக்கிவிடும்
*********************************************************.                                 
மு.சுகவனேஸ்வரன்
M .S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
செல்.- 9443853756.
*********************************************************.

Friday, 10 May 2019

ஆண்மை குறைவு,நரம்பு தளர்ச்சி

ராஜவல்லாதி பருப்பு லேகியம்.
**********************************
**********************************                                                       சுத்தி செய்த சேராங்கொட்டையின் பருப்பு -  350 கிராம்                             இதனை வெந்நீரில் போட்டுச் சற்றுத் தாமதித்து இதன் மீதுள்ள தோலை நீக்கி  ஈரமில்லாமல்  வெய்யிலில் உலர்தி கொள்ளவேண்டும்.                                                                                   மேற்றோல் நீக்கின  வாதுமைப்பருப்பு,                         மேற்றோல் நீக்கின முந்திரிப் பருப்பு ,
மேற்றோல் நீக்கின     பீஸ்தா பருப்பு
 மேற்றோல் நீக்கின அக்ரோட் பருப்பு
 மேல் தோல் நீக்கின.   சார பருப்பு                                                 இவை வகைக்கு -  36 கிராம்.
பஹமனேசுபேத், (யுனானி பொருள்)
பஹமனே சுருக்,  (யுனானி பொருள்)
தூதரிசுபேத்,         (யுனானி  பொருள்)
தூதரி சுருக்,          (யுனானி பொருள்)
நீர் முள்ளி விதை
 இவற்றின் தனித்தன்த் தூள்கள்.                                             வகைக்கு -  18  கிராம்                                 .                               மேற்றோல் சீவின சுக்கு,
பறங்கிக்சக்கை                                                               தண்ணீர்விட்டான் கிழக்கு,
பூமிசர்கரைக் கிழக்கு
நிளப்பனை கிழங்கு
வாலு ளுவையரிசி
வெட் பாலையரிசி
மிளகு திப்பிலி பெருஞ்சீரகம்.
 போன்றவைகளின் தூள்கள் கைகக்கு   - 9 கிராம்.                                                                           சர்க்கரை -  700 கிராம்                                                                                தேன்         -  350 கிராம்                                                      கற்கண்டு. -175 கிராம்.
பசு நெய் செல்ல தக்க அளவு.
 குங்கும்ப் பூ  -4  கிராம்
*******************************************************
செய்முறை
************.
முன் சொல்லியிருக்கிற பருப்பீனங்களைத் தனித்தனியே நெய்யில் வறுத்து அம்மியில் வைத்து பால்விட்டு வெண்ணனய் போல் அரைத்துக் கொள்ளக் கொள்ள வேண்டும்.
குங்குமப் பூவைத்தனியே அரைத்து வைத்து கொள்க தூள்களையெல்லாம் ஒன்று கலந்து வைத்து கொள்க. முன் சித்தப் படுத்தின பருப்பினங்களையும் குங்குமப் பூ வையும கலந்து வைத்து கொள்க
சர்கரையை சுண்ணாம்பு தெளிவுநீர் விட்டு பாகுசெய்து பாகு பதத்தில் பாலில் அரைத்து வைத்து இருக்கும் பருப்பினங்களை போட்டு வேக வைத்து பதம் பார்த்து பின் சூரணங்களை கொட்டி நன்றாக கிண்டி லேகிய பதத்தில் இறக்கி தேன் விட்டு நன்றாக கிளரி பின் கற்கண்டை தூள் செய்து தூவி கிண்டி விடவும் பின் நன்றாக சூடு ஆறிய பின் நெய்யை உருக்கி கொதிக்கும் போது லேகியத்தில் விட்டு நன்றாக கிண்டி விடவும் நெய் உள்வாங்கும் அளவிற்க்கு சிறிது சிறிதாக விட்டு  நன்றாக கிண்டி பத்திரபடுத்தவும்
*************************************************************** பயன்படுத்தும் விதம்
***********************.
காலை இரவு உணவுக்கு பின் 10 கிராம் அளவு சாப்பிட்டு கற்கண்டு போட்டு காய்ச்சிய பசும்பால் 200 மில்லி குடிக்கவும்
***********************
தீரும் நோய்கள்
***********************
 மூளையைப் பலப்படுத்தி நரம்புகளை முறுக்காக்கும் சோர்ந்து போயிருக்கிற ஆண்குறி பலப்பட்டு அதன் இயல்பு வலிமை நலம் உண்டாகும் உடற் சத்து புணர்ச்சி சத்து விருத்தியாகும் குருதியிலுள்ள மாசுகள் நீங்கி அதனால் நேரிட்டிருக்கிற தீயநோய்கள் நீங்கும் இன்னும் இதனுடன் தங்க பற்பம் தங்க உரம் வெள்ளி பற்பம் வெள்ளி செந்தூரம் சேர்த்து சாப்பிட்டால் மிக அபரிதமான பலன் கிட்டும் கேன்ஸர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர் ரக மருந்துகள் கொடுக்கும் போது உடல் தேறுவதற்க்கு இந்த லேகியத்தை கொடுக்கலாம் தோல் நோய்களுக்கு மருந்து கொடுக்கும் போது இந்த லேகியத்தை கொடுத்தால் நோய் விரைவில் குணமாகும் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுக்கும் இது மிகச் சிறந்த மருந்தாகும்
**************************.
பத்தியம்
**************************
புளி புளிப்புப் பண்டங்கள் புகை அசைவம் மது அகத்திக்கீரை பாவற்க்காய் ஆகாது.
**********************************************************
**********************************************************
M .S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
செல்- 9443853756.
**********************************************************

இரத்தகசிவு,இருதய ஓட்டை

சித்த மருத்துவத்தில் மேலும் ஒரு பெருமருந்து.
                                 குருவண்டு
                *********************************
                *********************************

குருவண்டு எல்லா வகையான இரணங்களையும் ஆற்றும்.
மூக்கில் இரத்தம் வருதல்.காதில் புண் ஏற்பட்டு சீல் வடிதல்.
இருதயத்தில் பிறவியிலேயே ஏற்படும் ஓட்டை காணப்படுதல்.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அதிக இரத்த போக்கு மற்றும் வெள்ளை படுதல்.உள் உறுப்புகளில் காணப்படும் இரணங்கள்  இரத்த குழாய்களில் ஏற்படும் இரத்த கசிவு. ஆரம்ப கால குடல் இறக்கம்.மூலம் பௌத்திர ஓட்டை ..
பல் ஈறுகளில் இரத்தம் கசிதல் ஆகிவை  குணமாகும்.
மேலும் இது உள் உறுப்புகளில் எங்கு ஒட்டை
இருந்தாலும் அடைக்கும் சிறப்புத் தன்மைக் கொண்டது.
எனவே

அடைப்பைது குருவண்டு என நினைவில் வைத்து
கொள்ள வேண்டும்

இது இரத்தப்போக்கை நிறுத்துவதில் ராஜ மருந்து ஆகும்.

*******************************************************
*******************************************************
M.S சித்தா சிகிச்சை &  ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
*******************************************************
*******************************************************

குடல் புண்,செரியாமை,வாயு தொல்லை

.........................பிரண்டை.......................
****************************************
  முத்தைய பதிவில் பிரண்டை உப்பு பதிவிட்டேன்.
நிறய நன்பர்கள் போன் செய்து விலைக்கு கேட்டார்கள்
என்னிடம் குறைவாக இருந்ததனால் சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டது.மேலும் செய்முறையை வெளிப்படையாக வெளியிட்டேன் அனைவரும் செய்து பயன்படுத்தவும். தற்போது தயாராகி கொண்டு இருக்கிறது முடித்தவுடன் மற்றவர்களுக்கும் கொடுக்கிரேன்.
****************************************

                     பிரண்டை லேகியம்
*******************************************
*******************************************
தேவையான பொருட்கள்.
***************************:
 கறிவேப்பிலை 2 கிலோ கொத்தமல்லி 2 கிலோ புதினா 2 கிலோ வெள்ளை பூண்டு 2 கிலோ இஞ்சி 2 கிலோ பிரண்டை 2கிலோ பசுநெய் 2 கிலோ மலை தேன் 2கிலோ கருப்பட்டி  4கிலோ எலுமிச்சம் பழம் 100 எண்ணிக்கை.

 செய்முறை
*************
மேற்கண்ட பச்சிலை சரக்குகளை நன்றாக தண்ணீரில் கழுவி வேர் காம்பு குச்சிகளை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் கொத்தமல்லியில் வேர்களை மட்டும் நீக்கி எடுத்து கொள்ள வேண்டும் பிரண்டை இளங் கொழுந்தாக கொண்டு வந்து நான்கு புறங்களிலும் உள்ள பட்டைகளை உரித்து நீக்கி சுத்தம் செய்த உள்பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் எலுமிச்சம் பழம் 100 எண்ணிக்கையை சாறு பிழிந்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும் இஞ்சியை நன்றாக கழுவி தோல் நீக்கி உரலிலிட்டு எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக இடித்த சாறு பிழிந்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும் இஞ்சி சாறு எலுமிச்சம் பழச்சாறு இரண்டையும் ஒன்றாக  கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மேற்கண்ட பச்சிலை சரக்குகளை இஞ்சி எலுமிச்சை பழச்சாறு விட்டு நன்கு கர்க்கமாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி இஞ்சி எலுமிச்சை பழச்சாறு விட்டு கர்க்கமாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு இரும்பு வானிலையில் மேற்கண்ட அனைத்தையும் இட்டு இரண்டு லிட்டர் பசும்பால் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

 இதில் சேர்க்க வேண்டிய சரக்குகள்:
****************************************
சுக்கு-100 கிராம் மிளகு 100 கிராம் திப்பிலி 100 கிராம் பெருங்காயம் 100 கிராம் ஓமம் 100 கிராம் சீரகம் 100 கிராம் கொத்தமல்லி 100 கிராம் சித்தரத்தை  100 கிராம்
ஏலக்காய் 100 கிராம் கிராம்பு 100 கிராம் மேற்கண்ட சரக்குகள் அனைத்தையும் இளவறுப்பாக வறுத்து உரலில் இட்டு இடித்து வஸ்திர காயம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும் கருப்பட்டியை ஒரு சட்டியில் இட்டு இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி பச்சிலை சரக்குகள் உள்ள இரும்பு வானலியில் ஊற்றி கரைக்க வேண்டும் பின் இந்த இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து  எரித்து வரவேண்டும் மெழுகு பதம் வந்தவுடன் இறுதியாக அடிபிடிக்காமல் எரிக்க வேண்டும் மெழுகு பதம் வந்தவுடன் அரைத்து வைத்துள்ள சூரணத்தை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி பின் நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும் நீர் அனைத்தும் வற்றி சரக்குகள் நன்கு வெந்து லேகிய பதம் வந்தவுடன் இறக்கி ஆறியதும் மலைத் தேன் ஊற்றி நன்கு கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும் .

உபயோகிக்கும் முறை:
*************************
நெல்லிக்காய் அளவு காலை மாலை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் .

தீரும் நோய்கள்:
******************
உணவு உண்ண முடியாமை உணவு உண்டால் உடனே வாந்தி வருதல் வயிற்றில் உள்ள புண் நீங்கி பித்த அரோகம் நீங்கிவிடும் வயிற்றிலுள்ள நாள்பட்ட வயிற்று வலி இடுப்பு வலி 21 வகையான குன்ம வயிற்று வலிகள் குணமாகும் செரியாமை நீங்கி ஜீரண சக்தியை கொடுத்து சரீர பலம் உண்டாகும் வாய்வு பெருத்து தொந்தி வயிறு போல் கனமான வயிறு உள்ளவர்கள் சாப்பிட்டால் சரீரத்தின் வாய்வு பெருக்கம் நீங்கி இயற்கையான சரீர கணம் உண்டாகும் மகோதரம் சம்பந்தப்பட்ட பாண்டுரோகம் குணம்கானலாம் இதற்கு பத்தியம் எதுவும் இல்லை.
*******************************************************
******************************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
******************************************************
******************************************************

சாம்பிராணி தூபம்

மருதானி விதை                     --500 கிராம்
சிங்கப்பூர்  TT சாம்பிரானி   --500 கிராம்.                          பாலில் சுத்தி செய்த வெள்ளெருக்கன்
வேர்பட்டை தூள்                      -- 10 கிராம்
புளிச்ச கீரை கொழுந்து (தளிர்)
காய வைத்து பொடி செய்தது   -- 10 கிராம்
அனைத்தையும் கலந்து வெள்ளி. செவ்வாய்
நாட்களில் மாலை நேரம் வீடுகளில் தூபம் போட்டு வரவும்.
தூபம் போட அரசமரகுச்சியை பயன்படுத்தி
நெருப்பிடவும்.

அனேக நன்மைகள் நடக்கும்.

*****************************************************
*****************************************************

தூக்கத்தில் விந்து வெளியேறுதல்,வெட்டை நோய்

சுக்கிர மேக சுண்ணம்.
*************************
*************************
தூக்கத்தில் விந்து போதல். மூத்திரத்தில் விந்து போதல். முக்கி மலம் கழிக்கும் போது விந்து போதல்.தானே விந்து நழுவுதல் . நீர்தாரை எரிச்சல்.முத்திரம் மஞ்சலாக போதல்.முத்திரத்தில் இரத்தம் போதல். போன்ற வெட்டையை  5 முதல் 10  நாளில் நீக்கி  ஜனன இந்திரிய உருப்புகளை போசிப்பதில் நிகரற்றது.

***********************************************
***********************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்
மு. சுகவனேஸ்வரன்.
9443853756
***********************************************
***********************************************

வயிற்று வலி,மயக்கம்

சஞ்ஜீவி பற்பம்.
********************
********************
தேவையான பொருட்கள்.
****************************
படிகாரம் 125 கிராம்.
நவாச்சாரம் 75 கிராம்
வெடியுப்பு 600 கிராம்

செய்முறை
*************
முன்றையும் தனித்தனியாக அரைத்து பின் ஒன்று சேர்த்து அரைத்து. ஒரு சட்டியிலிட்டு உருக்கி ஒரு பிங்கான் பாத்திரத்தில் விடவும்.இதனை ஆறியபின் நன்கு கல்வத்திலிட்டு அரைத்து எடுத்துக்கொள்க.

பயன்கள்.
************
தேகதிடம் அறிந்து காலை மாலை தேவைபட்டால் மதியம் என தகுந்த அனுபானத்தில் எடுத்து கொள்ளலாம்.

வெளுப்பு உப்பு சத்து . கால் வீக்கம். முதலிய நோய்கள் தீரும்

கடுக்காய் குடிநீருடன் எடுத்து கொண்டால் செறியமை நோய்கள் தீரும்.

பெருங்காயத்துடன் எடுத்து கொண்டால் வாயு தீரும்.

இஞ்சி சாற்றுடன் எடுத்து கொண்டால் மலக்கட்டு  தீரும்

நெருஞ்சில் சாறுடன் எடுத்து கொண்டால் சிறுநீர்கட்டு தீரும்

சுரைகொடிச் சாறுடன் எடுத்து கொண்டால் உப்பு சத்து குறையும்.

சோம்புகுடிநீர் உடன் எடுத்து கொண்டால் வயிற்று வலி தீரும்

சீரககுடிநீருடன் எடுத்துகொண்டால் கிறுகிறுப்பு .தீரும்.

 அனுபானம் அறிந்து பல நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
**********************************************************
*********************************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
**********************************************
**********************************************

மாலைக்கண்,கண்எரிச்சல்,தெளிவான பார்வை

சித்த மருத்துவத்தின் பெருமைகள்                                              சித்த மருத்துவத்தில் மேலும் ஒரு பெருமருந்து .
                       அயகாந்த சுண்ணம்:
***************************************************
***************************************************
திரிகடுகு திரிபலா பஞ்ச தீபாக்கினி தாது சூரணம் தாது லேகியம் கரிசாலை இலேகியம் தேற்றான் கொட்டை லேகியம் போன்றவற்றிலும் நோய்க்கு தகுந்தார்போல் இன்னும் அனேக அனு பானங்களை பயன்படுத்தி கொடுக்கலாம்

 துரும்பு போல் மெலிந்த உடல் வஜ்ஜிர தேகம் பெறும் உடல் வளம் உடல் வலிமை உடல் அழுத்தம் ஆகியவை உண்டாகும்..

 இந்த மருந்தை உடலாலும் மனதாலும் பத்தியம் மேற்கொண்டு சாப்பிட்டால் விந்தானது நுங்கை போல் இறுதி கட்டும் இரு கண்களிலும் செவ்வரி உண்டாகும் பார்வைத் திறன் அதிகரிக்கும் உடலிலுள்ள அனைத்து நோய்களுக்கும் உடல் உறுப்புகளின் பாதிப்பிற்கும் ரத்தத்தில் உள்ள மாசு மற்றும் வெப்பமே காரணம் இந்த மருந்தானது குருதியிலுள்ள மாசுகளை நீக்கி குருதியை தூய்மைப் படுத்துகின்ற சக்தி  இருக்கிறபடியால் அநேக நோய்களுக்கு அனுபானம் அறிந்து பயன்படுத்தலாம்.

 வாசியோகம் பயிலுபவர்கள் முறைப்படி சில பத்திய முறைகளை கடைபிடித்து மருந்து எடுத்துக்கொண்டால் மிக உன்னதமான பயனை பெற முடியும் இந்த மருந்தில் அதற்குண்டான சூட்சுமம் உள்ளது இது அனுபவமாக கொடுத்து உணரபட்டதாகும் . இந்த மருந்தை பணத்துக்காக ஆசைப்பட்டு அனைவருக்கும் கொடுக்க கூடாது.என்பது சான்றோர் வாக்கு. இல்லறத்தார்கள் நன்னடத்தை உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் தீய எண்ணம் உள்ளவர்களுக்கு கொடுக்க கூடாது இந்த மருந்தை உபயோகிக்கும் பொழுது நன்கு பசி எடுக்கும் அதனால் செரித்தல் சக்திக்கு தகுந்தபடி பசுவின் பால் பால்கோவா நெய் வெண்ணை பாலேடு வாதுமை பருப்பு முந்திரி அல்வா கேரட் அல்வா போன்றவற்றை சக்திக்குத் தகுந்தாற்போல் எடுத்துக் கொள்ள வேண்டும் இரவில் மிதமான மலமிளக்கி சூரணம் அல்லது சிறிது திரிபலா கசாயம் குடித்துவிட்டு உறங்க வேண்டும்

ரத்தம் சுத்தமாகும் பித்தம் சீராகும் தொற்றுநோய் தடுக்கப்படும் சரும மினுமினுப்பாகும் பல் வலிமை பெறும் கண் பிரகாசமாகும் கண்ணிற்கு காந்த சக்தி உண்டாகும் மாலைக்கண் நோய் குணமாகும் எலும்புகள் வலுவாகும் நரம்பு தளர்ச்சி நீங்கும் நரம்புகள் பலம் பெறும் ஆண்மை தன்மை மிகுந்து அணுக்கள் அதிகரிக்கும்.
******************************************************
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
******************************************************
******************************************************

ஆண்மை குறைவு,விறைப்பு தன்மை

மஹா விரிய குளிகை:
**********************************************
**********************************************
ரச சுண்ணம் 5 கிராம்
அய பற்பம் 5 கிராம்
அபிரக பற்பம் 5 கிராம்
நாக சுண்ணம் 5 கிராம்
பலகரை சுண்ணம் 5 கிராம்
வங்க சுண்ணம் 5 கிராம்
சங்கு சுண்ணம் 5 கிராம்
வெள்ளி பற்பம் 2 கிராம்
தங்க பற்பம் 1 கிராம்

அனைத்தையும் கல்வத்திலிட்டு பால் விட்டு 3 மணி நேரம் அரைக்கவும் பின் கசகசா பால் விட்டு 3 மணி நேரம் அரைக்கவும் பின் அதிமதுரம் கசாயம் விட்டு 3மணி  நேரம் அரைக்கவும் பின் இதனுடன்

 சுத்தி கிராம்பு சூரணம் 10 கிராம்
 சுத்தி சுக்கு சூரணம் 10 கிராம்
சுத்தி மிளகு சூரணம் 10 கிராம்
நரியிலந்தை இலை சூரணம் 10 கிராம்
அக்கரகாரம் சூரணம் 10 கிராம்
ஜாதிக்காய் சூரணம் 10 கிராம்
திப்பிலி சூரணம் 10 கிராம்
நயம் சந்தனம் சூரணம் 10 கிராம்
கம்மாறு வெற்றிலை சூரணம் 70 கிராம்

அனைத்தையும் மேற்கண்ட மருந்துடன் கலந்து கம்மாறு வெற்றிலை சாறு விட்டு 16 மணி நேரம் அரைத்து பட்டாணி அளவு மாத்திரையாக உருட்டி தங்க உரம் அல்லது வெள்ளி உரம் ஏதாவது ஒன்றில் பிரட்டி நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்

பயன்கள்:
**********
காலை இரவு 1 அல்லது 2 மாத்திரை பாலுடன் எடுக்கவும் இதனுடன் தாது லேகியம் சேர்த்து எடுத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்

ஆண்மை கோளாறுகளை நீக்கி வீரமான எழுச்சியை உண்டாக்கும் இது மிகவும் உயர்வான வீரியம் விரைப்பு போன்றவற்றை உருவாக்கும் மருந்து.
**********************************************
**********************************************
M.S . சித்தா சிகிச்சை மையம்.
மு. சுகவனேஸ்வரன்.
9443853756.
**********************************************
**********************************************

நெஞ்சு சளி,தலை பாரம்

.                                        கப சுத்தி
                   *********************************
மரணத்தைக் கொடுக்கும் எமன் என்று சித்தர்களால் சொல்லப்படும் கோழையாகிய சளியை அறுத்து வெளியேற்றும்
                               கரிசாலை நெய்
                     ******************************
தேவையான பொருட்கள்:
****************************
சுத்தமான கரிசாலை சமூலகற்கம்  தேங்காய் அளவு சுத்தமான நாட்டு பசு நெய்                 500 மில்லி லிட்டர் சீனாக்காரம்                                            5 கிராம்

 செய்முறை:
****************
சுத்தமான கரிசாலை சமூலத்தை எடுத்து கல்வத்திலிட்டு அரைத்து உரி தேங்காய் அளவு கற்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் பின் ஒரு பாத்திரத்தில் பசு நெய் ஊற்றி அதில் கற்கத்தை நன்கு கலந்து அதனுடன் சீனாக்காரம் பொடித்து சேர்த்து அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து மெழுகு பதம் வந்ததும் இறக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்

 உபயோகிக்கும் முறை:
***************************
இதனை காலை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து காலைக்கடன் முடித்து தந்தசுத்தி நேத்திர சுத்தி செய்து பின்பு கரிசாலை நெய்யை வலது கை கட்டை விரலால் தொட்டு வாயை நன்கு திறந்து உள்நாக்கில் படும்படி தடவ வேண்டும் இவ்வாறு  6முறை தடவ வேண்டும் பின்  2மணி நேரம் அல்லது 1 மணி நேரமாவது உணவோ நீரோ அருந்தாமல் வெளியேறும் எச்சில் சளியை கீழே துப்பிய வாரு இருக்க வேண்டும் இதனை தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து பின் வாரம் ஒரு முறை செய்யலாம்

பயன்கள் .
************
          நரம்புகளில் அடைத்து இருக்கும் கோழை நூல் நூலாக வெளியேறும்
          தொண்டைச்சளி மண்டை சளி நெஞ்சு சளி என அனைத்தும் வெளியேறும்
           இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள மிகுதியான அசுத்த கபம் நீக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் பெறும்
           இந்த அற்புதமான கரிசாலை நெய் மருந்தை கூறாத சித்தர்களே இல்லை என சொல்லலாம் .
மரணமில்லா பெரு வாழ்வை அடைந்து நமக்கு அவ்வழி சொல்லி சென்ற வள்ளலார் ராமலிங்க அடிகளார் கரிசாலையின் பெருமையை அதிகமாக கூறியுள்ளார்..
*********************************************************
M .S .சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
***********************
***********************.

கண் குறைபாடு,தெளிவான பார்வை

.                         கண் போஷிணி
               *******************************

தேவையான பொருட்கள்:
****************************
பேரிச்சம் பழம் 15 கிராம்
அத்திப்பழம் 15 கிராம்
பாதாம் பருப்பு 15 கிராம்
சோம்பு 5 கிராம்

செய்முறை:
*************
 மேற்கண்ட அனைத்தையும் சுடு பாலில் ஊற வைத்து நன்கு மை போல் அரைத்து 200 மில்லி லிட்டர் பாலில் கலந்து மாலை நேரத்தில் அருந்த வேண்டும் தொடர்ந்து இரண்டு மண்டலம் எடுத்துக்கொள்ளலாம்.

 தீரும் நோய்கள்:
********************
தாது நலிவினால் ஏற்படும் அனைத்து விதமான கண் குறைபாடும் நிவர்த்தியாகும் உடல் சோர்வு மாலைக்கண் கண் கூச்சம் ஆகியவை குணமாகவும் இரத்தம் விருத்தியாகும் மலச்சிக்கல் நீங்கும் நரம்பு பலப்படும் பார்வை மங்கல் நீங்கி தெளிவான கண் பார்வையைக் கொடுக்கும்.
********************************************
M.S. சித்தா சிகிச்சை மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
************************************
************************************

இரத்த கொதிப்பு,வயிற்று பிரச்சனை

.                   இஞ்சி லேகியம்:
    ***********************************
*****************************************
தேவையான பொருட்கள்.
*****************************
இஞ்சி 2 கிலோ
ஏலக்காய் 200 கிராம்
உலர்ந்த திராட்சை 200 கிராம்
பேரீச்சம்பழம் விதை நீக்கியது  2  கிலோ
எலுமிச்சம்பழச் சாறு 500 மில்லி
சர்க்கரை 5கிலோ
நெய் ஒரு லிட்டர்
தேன் ஒரு லிட்டர்
சுண்ணாம்பு தெளிவு நீர் தேவையான அளவு
பசும்பால் தேவையான அளவு

செய்முறை:
**************
முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தி செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கல்வத்திலிட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் பேரீச்சம்பழம் உலர்ந்த திராட்சை இரண்டையும் தேவையான அளவு பசும் பால் விட்டு மைய அரைத்து அதில் அரைத்த இஞ்சி ஏலக்காய் சூரணம் எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சுண்ணாம்பு தெளிவு நீர் ஊற்றி சர்க்கரை கலந்து அடுப்பேற்றி பாகு காய்ச்ச வேண்டும் பதம் வந்ததும் மேற்கூறிய கலவையை கலந்து லேகிய பதம் வரும் வரை நன்கு கிளறி இறக்கி பின் தேன் சேர்த்து கிளறவேண்டும் பின் நன்கு ஆறியதும் நெய்யை உருக்கி சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவேண்டும்

 உபயோகிக்கும் முறை:
****************************
5 முதல் 10 கிராம் காலை இரவு உணவுக்கு பின் சாப்பிட வேண்டும் தீரும் நோய்கள்: ரத்த கொதிப்பு வாய்வு வயிற்று பிரச்சனை அஜீரண கோளாறு ஆகியவை குணமாகும் நன்கு பசி உண்டாகும் உடலை நன்கு போஷிக்கும்.
********************************************************
M.S. சித்தா சிகிச்சை மையம்.
மு.சுகவனேஸ்வரன்
9443853756
*********************************
*********************************

புற்று நோய்,சரவாங்கி வாதம்

சித்த மருத்துவத்தில் மேலும் ஒரு பெருமருந்து.
                         காலனை வெல்லும்
                    காலந்தக கௌரி பதங்கம்:
           ***************************************
*****************************************************
சுத்தி செய்த ரசம் 100 கிராம் .
சுத்திசெய்த இந்துப்பு 100 கிராம்
சுத்திசெய்த வளையல் உப்பு 100 கிராம்
சுத்தி செய்த கல்லுப்பு 100 கிராம்
சுத்தி செய்த வெடியுப்பு 100 கிராம்
சுத்திசெய்த அன்னபேதி 100 கிராம்
சுத்திசெய்த படிகாரம் 100 கிராம்

வரிசைப் பிரகாரம் ஒவ்வொன்றாக கல்வத்திலிட்டு உறவாகும் படி அரைத்து பின் கருப்பு வெற்றிலைச் சாற்றை சிறிது சிறிதாக விட்டு 6 அல்லது 7 மணி நேரம் நன்கு அழுத்தி அரைக்க ரசம் மடிந்து மருந்துகள் ஒரே கலவையாகும் இவற்றை வில்லையாக தட்டி வெயிலில் காய வைக்க வேண்டும் நன்கு காய்ந்ததும் சிறிது சுத்திசெய்த மண்கலயத்தில் மருந்தை வைத்து கலய வாய்க்கு மூடி போட்டு மூடியில் 4, 5 துவாரம் செய்து உளுந்து மாவு  சீலை 3 செய்து நன்கு காய்ந்ததும் களிமண் சீலை 3 செய்து காய வைக்க வேண்டும் சீலை மண் நன்றாக காய வைக்க வேண்டும் இல்லையேல் பதங்கம் குறைவாக கிடைக்கும்
ஒரு நடுத்தரமான பதங்கபானை மூடியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் கீழ் பானையில் சோற்றுப்பு வறுத்து தூள் செய்து பாதி பானை அளவு கொட்டவேண்டும் அதன் மேல் மருந்து உள்ள கலயத்தை வைத்து சட்டிக்குமேல் மூடும் மூடியில் உட்புறம் குப்பைமேனி தனிச்சாறு 5 முறை தடவி தடவி காயவைத்து சட்டியை மூடி ஏழு சீலை மண் வலுவாக செய்து காய்ந்தபின் அடுப்பில் வைத்து  கடாக்கினியாக எரித்து ஆறவிட்டு அடுத்த நாள் சீலை மண்ணை நிதானமாக பிரித்து மேல் மூடியில் இருக்கும் பதங்கத்தை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் .
அடுத்து

சுத்தி செய்த வீரம் 25 கிராம்
சுத்தி செய்த பூரம்  25 கிராம்
சுத்திசெய்த லிங்கம் 25 கிராம்
சுத்திசெய்த ரச செந்தூர வில்லை 25 கிராம்
சுத்தி செய்த வெள்ளை பாடாணம் 25 கிராம்
சுத்திசெய்த மனோசிலை 25 கிராம்
சுத்தி செய்த தாளகம் 25கிராம்
சுத்தி செய்த கந்தகம் 25 கிராம்
சுத்திசெய்த காந்தம் 25 கிராம்
சுத்தி செய்த மயில் துத்தம் 10 கிராம்
சுத்திசெய்த மிருதார்சிங்கி 100 கிராம்

 அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக கல்வத்திலிட்டு அரைக்க வேண்டும் ஒரு சரக்கை நன்கு அரைத்து பின் அடுத்த சரக்கை சேர்த்து அரைக்க வேண்டும் அனைத்தும் நன்கு உருவாகும்படி அரைத்து பின் வெற்றிலைச் சாற்றை விட்டு 6 மணி நேரம் அரைத்து கையில் கல்வத்தில் ஒட்டாத பதமாக அரைத்து வில்லையாக தட்டி காய வைக்க வேண்டும் நன்கு காய்ந்ததும் முன்பு போலவே ஒரு சிறிய சுத்திசெய்த மண் கலயத்தை மூடியுடன் எடுத்து அதன் மூடியில், 4,5 துவாரம் செய்து கலயத்தில் வில்லைகளை அடுக்கி அதன்மீது முன்பு செய்து வைத்து  இருந்த பதங்கத்தை தூவி விட வேண்டும் பின் கலயத்தை மூடி உளுந்து மாவு சீலை செய்து காயவைத்து பின் மண் சீலை வலுவாக செய்து காய வைக்க வேண்டும்

பின் இரண்டு பதங்க சட்டிகளை எடுத்து கீழ் சட்டியில் வறுத்து பொடித்த சோற்றுப்பு ஒரு கிலோ பொரித்த சீனாக்காரம் அரை கிலோ சுத்தி செய்த வெடியுப்பு 100 கிராம் மூன்றையும் தனித்தனியாக அரைத்து பின் நன்கு கலந்து அரைத்து எடுத்ததை போட்டு பரப்பி விட வேண்டும் அதன் மீது மருந்து கலயத்தை வைத்து மேல் சட்டியின் உட்புறம் கரிசாலைச் சாற்றை ஐந்து முறை தடவி காயவைத்து எடுத்து கீழ் சட்டியை மூடி உளுந்து மாவு சீலை 3 செய்து காயவைத்து பின் மண் சிலை 4 செய்து காய வைத்து பானையை அடுப்பில் வைத்து வேப்ப விரகால் தீபாக்கினியாக கமலா க்கினியாக.  காடாக்கினீயாக   எரித்து ஆறவிட்டு

மறுநாள் சீலை மண்ணை மெதுவாக பிரித்து மேல் சட்டியில் இருக்கும் பதங்கத்தை தேய்த்து துடைத்து எடுத்து கல்வத்திலிட்டு சிறிது நேரம் அரைத்து பின் தாய்ப்பால் விட்டு சிறிது நேரம் அரைத்து கல்வத்தோடு வெயிலில் வைக்க வேண்டும் நன்கு காய்ந்தவுடன் அரைத்து மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் .

இதனை கசகசா அளவு அல்லது கடுகளவு பனைவெல்லத்தில் வைத்து கடும் பத்தியத்துடன் கொடுக்க வேண்டும்

மூன்று நாட்கள் மருந்து கொடுத்து பின் இடைவெளி விட்டு மூன்று நாட்கள் என கொடுக்கலாம்

மற்றும் 100 கிராம் சுத்திசெய்த லிங்கத்தை கல்வத்திலிட்டு 3 மணி நேரம் நன்கு அரைத்து பின் மேற்கண்ட பதங்கத்தை 10 கிராம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொண்டால் மிகச் சிறப்பாக குணப்படுத்தும் இதனை 10 முதல் 30 மில்லி கிராம் திரிகடுக சூரணத்தில் தேனில் நோயாளியின் தேக திடம் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு கூடுதலாகவும் குறைவாகவும் கொடுக்கலாம்

இதனை ஐந்து நாட்கள் ஏழு நாட்கள் ஒன்பது நாட்கள் என கடும் பத்தியத்துடன் குளிக்காமல் இருந்து மருந்து கொடுக்க வேண்டும் மருந்து முடிந்து ஒரு நாள் விட்டு அடுத்தநாள் சுத்தமான பசு நெய் உச்சந்தலையில் தடவி சுடுநீரில் குளிக்க வேண்டும் பின் நோயாளியின் நிலை அறிந்து மீண்டும் இடைவெளி விட்டு மருந்து கொடுக்கலாம்

 மருந்துமுடிந்த அடுத்த நாள் பத்திய முறிவு கசாயம் குடிக்க வேண்டும் இந்த மருந்தை திருநீலகண்ட வாலை பதங்கத்திற்கு கூறிய முறையில் மருந்து எடுக்கும் நாள் பத்திய முறிவு கடைபிடிக்கும் வழிமுறைகள் போன்றவற்றை பயன்படுத்தி நோய் குணமாகும் வரை இடைவெளி விட்டு மருந்து கொடுக்க வேண்டும் .

தீரும் நோய்கள்:
*******************
தனுர்வாதம் முதல் பச்ச வாதம் வரை வாதம் 80ம் தீரும் சூலை அரையாப்பு வெடித்த குட்டம் மேகம் கூன் முடக்கி வயிற்று வலி கடும் குன்மம் வாதம் கொருக்கு தோல் நோய்கள் தீராத தலைவலி ரத்தப்புற்று ஈரல் புற்று குடல் புற்று கண்ண புற்று மார்பகப் புற்று கருப்பை புற்று போன்ற சகல நோய்களையும் கண்டிக்கும் கொடிய வெட்டையாகிய பாலியல் நோய் சரவாங்கி வாதம் நரம்பு சார்ந்த நோய்கள் முதலிய அனைத்து நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் மற்றும் உடம்பில் மறைந்து இருக்கும் உட் பிணிகளையும் போக்கும் .

காலனை வெல்லும் காலாந்தக கௌரி என்பது சித்தர் மரபினர் வாக்கு .

குறிப்பு:
                    1. இந்த மருந்தை எரிக்க ஆரம்பிக்கும் போது வியாழக்கிழமை வியாழன் ஓரையில் தான் ஆரம்பிக்க வேண்டும் இந்த மருந்தை வெயில் காலத்தில் மட்டும் தான் செய்ய வேண்டும்.
                     2.இதற்க்கென பிறத்யோகமான முறையில் பாசாணங்களை சுத்தி செய்து கொள்ளவும்..
                     3. சிறந்த மருத்துவர்களின் மேற்பார்வையில் மருந்து செய்யவேண்டும்.
                     4.இது போன்ற மருந்துகளை நோயாளிக்கு கொடுக்கும் பொழுது மருத்துவரின் மேற்பார்வையிலேயே கொடுக்கப்பபட வேண்டும்.

****************************************************
M .S .சித்தா சிகிச்சை  & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
********************************
********************************

பித்த கிறுகிறுப்பு,வாந்தி,வாயு மயக்கம்

.                       இஞ்சி மணப்பாகு
                 ****************************
                ******************************

தேவையான பொருட்கள்:
*****************************
இஞ்சி சாறு 500 மில்லி
புதினாச்சாறு 250 மில்லி 
கொத்தமல்லி சாறு 250 மில்லி
மால்ட் வினிகர் அல்லது கடலை காடி 250 மில்லி
மண்டை வெல்லம் 15 பலம்
எலுமிச்சம் பழச்சாறு 250 மில்லி

செய்முறை:
*************
வெல்லத்தை வினிகர் விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் பின் அதில் மேற்கண்ட சாறுகளை கலந்து அடுப்பேற்றி எரித்து பாகுபதத்தில் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும் .

உபயோகிக்கும் முறை:
*************************
ஒரு கரண்டி அளவு எடுத்து வெண்ணீரில் கலந்து 3 வேளை ஒரு வாரம் அல்லது தேவையான நாட்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும் .

தீரும் நோய்கள்:
******************
பித்தக் கிறுகிறுப்பு வாந்தி .ரத்த கொதிப்பு வாயு மயக்கம் ஆகியவை குணமாகும் பைத்தியம் குடிவெறி நோய் மது பீடி கஞ்சா புகைபிடித்தல் ஆகிய வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

*****************************************************************
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
***********************************************
***********************************:***********

வெள்ளைப்படுதல்,இரத்த சோகை,காமாலை

வெண்பூசணி லேகியம்
****************************

பாடல் – சித்த வைத்திய திரட்டு –
***********************************
கொள்ளவே கூழ்ப்பாண்டாவி லேகி யந்தான்
குணமான கூழ்ப்பாண்டச் சாறுபடி நான்கு
விள்ளவே தாழையிட விழுதின் சாறு
விருதான படியொன்று தென்னம் பூவொன்று
தள்ளவே பழச்சாறு படிதா னொன்று
தளமான வாவின்பால் படிதானிரண்டு
பள்ளவே சர்க்கரைதான் பலமோர் பத்து
பதறாமற் கரைத்த தனைப் பாகுசேரே
சேருமே சீரகமு மல்லி கோட்டம்
வளமான மிளகுமா சிக்கா யேலம்
காருமே சாதிக்காய் சாதி பத்திரி
கருவான மதுரமொடு தாளீ சந்தான்
வாருமே ஒருவகைக்குப் பலமொன் றாக
வகையாகச் சூரணித்துப் பாகிற் றூவி
நேருமே தேநெய்படி யரைதான் விட்டு
நினைவாகக் கூலுபோல் கிண்டி வாங்கே

வாங்கியே புன்னைக்கா யளவு வீதம்
வளமான விலேகியத்தைக் கொண்டாயானால்
நீக்காமே காமாலை சோகை யெல்லாம்
நீங்காத வத்திசுர மத்தி வெட்டை
தாங்கியதோர் பிரமியங்கள் வெள்ளை வீழ்தல்
தளமாகும் தேகபுஷ்டி விந்து வூரும்
பாங்கியே யுஷ்ணநோய் நீர்ச்சுருக்கு
பறக்குமே புளிபுகைநீ தள்ளிக் கொள்ளே

செய்முறை விபரம் ---
 வெண்பூசணிகாய்ச் சாறு படி 4 (5.36 lit)
 தாழை விழுதுச் சாறு – படி 1(1.34lit)
 தென்னம்பூ சாறு -------- படி 1(1.34lit)
 எலுமிச்சம்பழ சாறு – படி  1(1.34lit)
 பசுவின் பால் படி –2 (2.68lit)
சர்க்கரை பலம் – 10 (350gm) ---- இவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து கரைத்து வட்கட்டி அடுப்பிலேற்றி காய்ச்சி பாகுபதம் வரும்போது கீழ்கண்ட சர்க்குகளினை சேர்த்து பொடித்து சலித்து பாகில் சேர்த்துக் கிண்டவும்

சரக்குகள் –
 சீரகம் ---------------------- பலம் 1 (35gm)
 கொத்தமல்லி -------- பலம் 1  (35gm)
 கோஷ்டம் ------------- பலம் 1  (35gm)
 மிளகு -------------------- பலம் 1  (35gm)
 மாசிக்காய் ------------ பலம் 1  (35gm)
 ஏலம் --------------------- பலம் 1  (35gm)
 சாதிக்காய் ----------- பலம் 1  (35gm)
 சாதிப்பத்திரி -------- பலம் 1  (35gm)
 அதிமதுரம் ----------- பலம் 1  (35gm)
 தாளிசம் --------------- பலம் 1 (35gm) இவையாவும் அளவுப்படி எடுத்து இளம்வருப்பாக வறுத்து சூரணித்து நன்றாக வடிகட்டிக் கொள்ள வேண்டும் இதை பாகில் கலந்து நெய் –1/4படி (350ml) தேன் - –1/4படி (350ml) சேர்த்துக் கிண்டவும்

உபயோகம் – காமாலை, சோகை, அஸ்தி சுரம் (எலும்பைப் பற்றிய சுரம்). அத்தி வெட்டை, பிரமியம், வெள்ளை,இந்நோய்கள் தீரும் உடல் வலுக்கும் விந்து ஊரும், சூட்டினால் உண்டாகும் நோய்கள் நீர்ச்சுருக்கு தீரும்
பத்தியம் – புளி புகை நீக்கவும்
அளவு – 5gm – 10gm வரை
*******************************************
M.S சித்தா சிகிச்சை  &  ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
*******************************************

Thursday, 9 May 2019

காடி நீர் செய்முறை

.                 சித்த மருத்துவத்தின் இரகசியம்
            ******************************************
                                        காடி நீர்
                                *****************

காடி செய்யும் விதம்:
**********************
ஒரு பெரிய பாத்திரத்தில் கால் படி கருங்குருவை அரிசியை சமைத்து கஞ்சியும் சாதமும் இரண்டையும் கொட்டி 6 படி சுத்தநீர் விட்டு துணியால் வாய்கட்டி சூரிய புடத்தில் வைத்துவர வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை வேறு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும் இப்படி ஒரு மாதம் கழிந்தபின் பார்க்க முதலில் போட்ட அன்னமானது காணப்படாது அந்த சமயம் மறுபடியும் கால் படி அன்னம் சமைத்து அதில் கலந்துவிட வேண்டும் கலந்தபின் நாள் தவறாமல் சூரிய  புடத்தில் வைப்பதுவும் வாரத்திற்கு ஒரு முறை பானை மாற்றுவதுவும் முக்கியமாய் கவனித்தல் வேண்டும் இதன்படி மாதம் ஒருமுறை அன்னம் சமைத்து கலந்துகொண்டு வரவேண்டும் இப்படி செய்துகொண்டு வருங்காலத்தில் மூன்று மாதத்திற்கு மேல் அந்த காடியை உபயோகித்து வரலாம் எவ்வளவு காடி எடுத்து கொள்ளுகின்றோமோ அவ்வளவு நீரை அதில் கலந்துவிட வேண்டும் இப்படி கலந்து வருவதால் எத்தனை ஆயிரம் பேருக்கு நாம் கொடுத்தாலும் காடி குறைந்துவிடாது ஆறு மாதத்திற்கு பின் காடியில் அதிக புளிப்பு ஏறிவிடும் ஆகையால் 4 நாளைக்கு ஒரு முறை பானை மாற்றுதல் வேண்டும் மழைக்காலங்களில் சூரிய புடத்தில் வைக்க இயலாத காரணத்தால் காடியில் பூசணம் பிடிக்காதபடி தடுக்க சமையல் செய்த பிறகு அடுப்பில் உள்ள நெருப்பை எடுத்து விட்டு அடுப்பின் மேல் காடியை வைத்து விட வேண்டும் இப்படி செய்ய காடி கெடாமல் இருக்கும் காடிக்கு அதிக நாள் ஏற ஏற புளிப்பு அதிகரிக்கும்புளிப்பு அதிகரிக்க அதிகரிக்க கொடுக்க வேண்டிய அளவை குறைத்தல் வேண்டும் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட காடியானது பௌர்ணமி தினத்தில் இரவில் ஒருவித சப்தத்தை உண்டு பண்ணும் .

காடியால் தீரும் வியாதி:
***************************
வயிற்று வலி நீர் கடுப்பு மார்வலி உஷ்ண பேதி அஜீரண பேதி விஷ பேதி முதலிய வியாதிகள் நீங்கும் சரீரத்திலுள்ள வெக்கையை போக்கும் .
லிங்க பதங்கம்.பாசாண பதங்கம் போன்ற பல்வேறு பெருமருந்துகள் செய்ய பெரிதும் பயன்படகூடியது.

காடி நீர் என்பது நம் நாட்டில் பழமையான ஒரு பெரிய மருந்து .
*************************************************************
இம் மருந்தானது தற்காலத்தில் முறை புரண்டு அநாகரிக வழியில் வியாபாரத்தை முன்னிட்டு  பொருளீட்டை முதன்மையாக வைத்து காடியை தயார்செய்து புட்டிகளில் பதனம்பண்ணி   கடைகளில் விற்கப்படுகின்றன பெரும்பாலானோர்கள் இந்த காடியை வாங்கி ஊர்காய்களுக்கும் மற்றும் மருந்தின் பிரயோகங்களுக்கும் உபயோகப்படுத்தி  வருகின்றார்கள் எனவே கடையில் விற்கும் காடியானது முன்னோர்கள் சொல்லி வைத்த காடி அன்று ஆனால் கடையில் விற்கும் காடியானது சர்க்கரையை வாணலில் போட்டு வறுக்க வறுக்க ஒருவித கருநிறமாக மாறிவிடும் அப்பொழுது அஸெட்டிக் ஆசிட் வேண்டிய அளவிற்கு சேர்த்து நீரைக் கொட்டி வடிகட்டி புட்டியில் பதனம் பண்ணி  விற்கப்படுவதே காடி ஆகும் இந்த காடியும் புளிப்புள்ளதாக காணப்படும்.ஆனால் இது உடலுக்கு பெரும் தீங்கை விலைவிக்கும் என்று கூறப்படுகிறது.
**************************************************************
M S.சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
**************************************************
**************************************************

Wednesday, 8 May 2019

கனை நோய்(praimary complex)

நேற்றைய பதிவில்
திராட்சை மணப்பாகு தயாரித்து பதிவிட்டேன்
**************************************************.
நிறைய நன்பர்களும்.மருத்துவர்களும் பலன்கள் என்ன என்று கேட்டார்கள் அதனால் இந்த பதிவு.
***********************************************
பயன்கள்.
***********
குழந்தைகளின்  கணை நோய்கள்.  Primari complex என்ற தேரா குழந்தைகள் அதாவது கற்ப சூட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் .திராட்சை மணபாகு சாப்பிட்டால் நன்கு உணவு எடுக்கும் ஜீரணமாகும் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள சத்து உடம்பில் சேரும் மற்றும் பசி தீபனம் உண்டாகும்.

முறையாக எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்கள் முறையாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு சாப்பிட்டு உடலையும் குடலையும் சுத்தப்படுத்தி கொள்ளாமல் உடலை பாதுகாக்காவிட்டால் உடம்பில் நீர்ச்சத்து வற்றி போய் இருக்கும் இது ஒரு வகையான கணை நோய் இதனால் உடலில் சூடு அதிகமாகி பசியின்மை செரிமானமின்மை தூக்கமின்மை போன்ற ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது. இந்த நிலை நீடித்தால் உடல் கடும் வெட்டையாகி உடல் உறுப்புகள் பலவீனம் அடையும் பல்வேறு தொந்த நோய்களுக்கு வழிவகுக்கும் இந்த திராட்சை சாப்பிட்டு வரும் பொழுது உடல் தெம்பாகும்.  ரத்தம் சுத்தமாகும்.
குழந்தைகளுக்கு படிப்பதற்கு ஒரு விதமான சுறுசுறுப்பு ஏற்படும்

படிக்கும்போது தூக்கம் வந்துவிடுகிறது அசதி ஏற்படுகிறது படித்த புத்தகத்தை கையில் வைத்தபடியே தூங்குவது இதுவெல்லாம் உடம்பில் வலு இல்லாத நிலையே இந்த நிலையில் உள்ள ஆண்களோ பெண்களோ குழந்தைகளோ பொதுவாக இந்த டானிக் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிட்டும்

மேலும் பாலியல் சூடு வெட்டைச் சூடு காமச்சூடு .
ரத்த வெட்டை. தாதுக்களில் ஏற்பட்டுள்ள வெட்டை அனைத்தும் சரியாகும் சப்த தாதுக்களிலும் உள்ள அழலை போக்கி உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்து இருக்கும் மிகவும் அற்புதமான மணப்பாகு.இதன் பெருமைகளையும் அனுபவங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்..

பொதுவாக அனைவரும் எடுத்துக் கொள்ள கூடிய மணப்பாகு திராட்சை மணப்பாகு நோய் இல்லாதவர்களும் ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்ளக்கூடிய மணப்பாகு இதன் பயன் எழுத நினைத்தால் நிறைய எழுதிக் கொண்டே போகலாம் அதனால்தான் நேற்றைய பதிவில் எழுதவில்லை அனைவரும் கேட்டதினால் ஓரளவு எழுத வேண்டியதாகியது

        வாழ்க சித்தர்கள்         வளர்க சித்த மருத்துவம்
     *********************      ****************************
  ********************************************************
M.S.சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756.
********************************************
********************************************

ஆண்மை குறைவு.

  ஆண்மை குறைவு என்றால் என்ன?              ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக...