ஆண்மை குறைவு என்றால் என்ன?
ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆண்மை குறைவு என்பது ஒரு உறுப்பு சம்பந்தப்பட்ட நோயல்ல. முழு உடலும் உள்ளமும் சம்பந்தப்பட்டதாகும்.
ஆண்மை குறைபாட்டை எளிதில் தெரிந்துகொள்வது எப்படி..
பொதுவாகவே ஆண்கள் சந்திக்கும் பிரச்சனையில் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் தான் பெரும் பிரச்சனையாக சில சமயத்தில் மாறி விடுகிறது.
இன்னும் சொல்லப்போனால் ஆண்மை குறைவு பிரச்சனை இருந்தாலும் சரி, தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலும் சரி.. இது ஒரு விதமான மன அழுத்தத்தை கொடுக்கும்.சரி ஒரு ஆணுக்கு உண்மையிலேயே ஆண்மை குறைவு உள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது.
அதாவது தாம்பத்யத்தில் ஈடுபடும் போது, உங்கள் முழு விருப்பம் உள்ளதா என நினைத்து பாருங்கள். ஏதோ கட்டாயத்திற்கு ஈடுபட்டால், தாம்பத்ய உறவு திருப்தியாக இருக்காது. இதற்கு அடுத்தபடியாக, எப்போது ஈடுபட்டாலும் இதே போன்ற பிரச்னை உங்களுக்கு இருக்கிறதா என சிந்தித்து பாருங்கள். இதை ஒப்பிட்டு பார்த்தாலே நமக்கு ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளதா என தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறை இது இரண்டும் தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.மேலும் அதிக மன அழுத்தம் இருந்தாலும் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள், தண்டுவட பிரச்னை உள்ளவர்கள். இவர்களுக்கு பொதுவாகவே தாம்பத்ய வாழ்க்கையில் சில பிரச்னைகள் வரும்.
ஆண்மைக்குறைவின் காரணங்களும் நிவர்த்திகளும்
ஆண்மை சக்தி என்பது முழு உடலும், உள்ளமும் சம்பந்தப்பட்டது. இதில் ராஜ உறுப்புகள் என்ற மூளை, இருதயம், கல்லீரல், விதைப்பை, நரபு மண்டலம் என்ற 5 உறுப்புகளும் முக்கியமானதாகும். இதில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
ஆண்மையின் கோட்பாடுகள்
சிற்றின்ப ஆசை உள்ளத்தில் ஏற்பட்டு, அந்த எண்ணம் மூளைக்கு அனுப்பப்படுகிறது.
1. மூளை:
மூளையானது, சிற்றின்ப ஆசையை நிறைவேற்ற, மற்ற உறுப்புகளுக்கு கட்டளையிடுகின்றது.
2. இருதயம்:
மூளையின் கட்டளைக்கேற்ப, இருதயம் வேகமாக அதிகப்படியான ரத்தத்தை பம்ப் செய்து ஆணு உறுப்புக்கு அனுப்பப்படுகிறது.
3. கல்லீரன்:
அதே போல் கல்லீரலின் செயல்பாடுகளால் உற்பத்தியாகும் பித்த வாய்வும், ஆணுறுப்புக்கு அனுப்பப்படும்போது, இருதயம் அனுப்பும் இரத்தமும், கல்லீரல் அனுப்பும் பித்த வாய்வும் ஒரு சேர ஆணுறுப்புக்குள் செல்லும்போது, ஹைட்ராலிக் போல ஆணுறுப்பு விம்மி எழுகிறது.
4. விதைப்பை:
விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவும், ஆணுறுப்புக்கு அனுப்பப்படும்போது, இருதயம் அனுப்பப்படும் இரத்தமும், கல்லீரல் அனுப்பும் பித்த வாய்வும் ஒரு சேர ஆணுறுப்புக்குள் செல்லும்போது, ஹைட்ராலுக் போல ஆணுறுப்பு விம்மி எழுகிறது.
5. நரம்பு மண்டலம்:
ஆண்மை சக்திக்கு மிக மிக இன்றியமையாது நரம்பு மண்டலமாகும். மூளையில் இருந்து அனுப்பப்படும் கட்டளைகள் மின் காந்த அலைகள் மூலம் மற்ற உறுப்புகளுக்கு அனுப்பப்படும் இருதயம், கல்லீரல், விதைப்பை அனுப்பும், ரத்தம், பித்த வாயு, விந்தணு, போன்றவற்றை ஆணுறுப்புக்கு எடுத்துச் சென்று, ஒரு விதமான கிளர்ச்சியையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தி, ஒரு மனிதனை தாம்பத்ய உறவுக்குத் தயார்படுத்தி, சக்தியாக செயல்படுவது நரம்பு மண்டலமாகும். இப்படி இந்த 5 ராஜ உறுப்புகளும் ஒரு சேர செயல்படும்போது தான் முழுமையான ஆண்மை சக்தி ஏற்படுகிறது. இதில் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் ஆண்மை குறைவு ஏற்படும்.
ஆண்மைக்குறைவின் அறிகுறிகள்
மூளை:
மூளையின் குறைபாடுகளால் ஆண்மை குறைவு ஏற்பட்டால் சிற்றின்ப ஆசையே இருக்காது. எப்போதும் சோம்பலாக இருப்பார்கள். ஆணுறுப்பு எழுச்சி இல்லாமல் தளர்ந்து சிறுத்து விடும்.
இருதயம்:
இருதயத்தினுடைய பாதிப்பால் ஆண்மை குறைவு ஏற்பட்டால், ஆணுறுப்பு மெலிந்து சிறுத்து இருக்கும், முழு விறைப்பு சக்தி இருக்காது. உறவில் ஈடுபடும்போது அதிக மூச்சு வாங்கும். துரிதமாக சக்தி வெளிப்பட்டு, மிகுந்த களைப்பும், பலகீனமும் ஏற்படும்.
ஈரல்:
ஈரலின் பாதிப்பால் ஆண்மை குறைவு ஏற்பட்டால் ஆணுறுப்பு எழுச்சியில்லாமல் சோர்ந்து இருக்கும். சில நேரம் சக்தி இருந்தாலும், உறவில் ஈடுபடும்போதே உணர்ச்சி குறைந்து உறுப்பு சிறுத்து விடும். தாம்பத்திய உரவு ஆரம்பித்தவுடன் ஒரு சில நொடிகளிலேயே சக்தி வெளிப்பட்டு சோர்ந்து பலகீனமாகி விடுவார்கள்.
விதைப்பை:
விதைப்பையின் பலகீனத்தால் ஆண்மை குறைவு ஏற்பட்டால், விந்து உற்பத்தி குறைவாக இருக்கும். விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருக்கும். விந்துவின் அடர்த்தி குறைந்தும் நீர்த்தும் இருக்கும். உயிரணுக்களின் நீண்டும் சக்தி குறைவாக இருக்கும். உடலுறவில் இன்பமோ உணர்ச்சியோ இருக்காது. ஆணுறுப்பு சிறுத்து விடும். உச்சகட்டம் என்பதே ஏற்படாது. இப்படிப்பட்ட ஆண்மை குறைவுள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியமே இருக்காது.
நரம்பு மண்டலம்:
நரம்பு மண்டலத்தின் பாதிப்பினால், ஆண்மை குறைவு ஏற்பட்டால், ஆணுறுப்பு சோர்ந்து மெலிந்து இருக்கும். உறுப்பின் அடிப்பகுதி சிறுத்தும், நுனிப்பகுதி பெருத்தும், கோணலாகவும் வளைந்தும் இருக்கும். விறைப்புத்தன்மை இல்லாமல் ஆணுறுப்பு மிகவும் சிறியதாக இருக்கும். உடல் உறவு ஆரம்பித்தவுடன் இன்பமோ உச்சகட்டமோ இல்லாமல் ஒரு சில நொடிகளில் சக்தி வெளிப்பட்டு விடும். இப்படிப்பட்ட 5 காரணங்களால் ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது.
.